வங்கக்கடலில் நடந்த மாற்றம்.. நாகையில் கொட்டி தீர்க்கும் கனமழை! வானிலை மையம் முக்கிய அப்டேட்
சென்னை: வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடித்து வருவதாகவும், இது காற்றழுத்த தாழ்வு மையமாக வலுப்பெறும் என ஏற்கெனவே கணிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் வங்கக்கடலில் புயல் உருவாவது வழக்கமாக மாறி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் ஓரிரு நாட்களுக்கு முன்னர் வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது. இது விரைவில் காற்றழுத்த தாழ்வு மையமாக வலுப்பெறக்கூடும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது. அதேபோல இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

மட்டுமல்லாது, இது தமிழ்நாடு மற்றும் இலங்கையை நோக்கி நகர்ந்து வருவதாகவும் கூறியிருக்கிறது. எனவே அடுத்து வரும் நாட்களில் சென்னை உட்பட வங்கக்கடல் ஓரம் உள்ள மாவட்டங்களில் மழை கொட்டி தீர்க்கும். இன்று நாகை மாவட்டத்தில் மழை அதிக அளவில் பெய்து வருகிறது. நாகையின் சிக்கல், நாகூர் மற்றும் கீவேளூர் உள்ளிட்ட பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
முன்னதாக நேற்று வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில் 25ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பலத்த மழை இருக்கும், குறிப்பாக வட கடலோர மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதாவது 25ம் தேதி,
கடலூர்
மயிலாடுதுறை
நாகப்பட்டினம்
திருவாரூர்
தஞ்சாவூர்
புதுக்கோட்டை
ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவ.26ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக
கடலூர்
தஞ்சாவூர்
திருவாரூர்
நாகப்பட்டினம்
மயிலாடுதுறை
புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
விழுப்புரம்
ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நவ.27ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக விழுப்புரம்
கடலூர்
மயிலாடுதுறை
திருவாரூர்
நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும். அதேபோல
திருவள்ளூர்
ராணிப்பேட்டை
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
சென்னை
திருவண்ணாமலை
கள்ளக்குறிச்சி
பெரம்பலூர்
அரியலூர்
தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications