ஒரே நேரத்தில்.. 2 இடங்களில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. மழை வெளுத்து வாங்கும்.. இந்திய வானிலை மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை: ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகளும் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

தெற்கு குஜராத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு குறைந்தழுத்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியும், தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய கங்கை நதி மேற்கு வங்கத்திலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

low-pressure-areas-form-simultaneously-in-two-regions-heavy-rains-likely-says-imd

2 இடங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள்

வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும், தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடையக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியிருந்தது.

இந்த நிலையில், 2 இடங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை மையம் கூறுகையில், "இந்திய நிலப்பரப்பை ஒட்டிய 2 பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி இருக்கிறது.

அடுத்த 24 மணி நேரத்தில்

தெற்கு குஜராத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு குறைந்தழுத்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியும், தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய கங்கை நதி மேற்கு வங்கத்திலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகளும், அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடையக் கூடும். இதனால் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்றும், கோவை மற்றும் நீலகிரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

சூடுபிடிக்கும் தென்மேற்கு பருவமழை

தென்மேற்கு பருவமழை நடப்பு ஆண்டில் முன்கூட்டியே தொடங்கியது மட்டுமல்லாமல் தொடர்ந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், கேரளா, கர்நாடகா, மும்பை, குஜராத், மகாராஷ்டிராவின் பல்வேறு இடங்கள், தலைநகர் டெல்லி என மழை வெளுத்து வாங்கி வருகிறது.

கர்நாடகாவில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மங்களூர், பம்ப்வெல், பிகர்னகட்டே உள்ளிட்ட பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. தலைநகர் டெல்லியிலும் கனமழை கொட்டி வருகிறது. மகாராஷ்டிராவின் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டி வருகிறது.

குறிப்பாக மும்பையில் பெய்த கனமழையால் அந்நகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இதேபோல் தானே, ராய்காட் மற்றும் பால்கரிலும் கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், நாளை வரை கேரளாவில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+