மே 22ல் அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்தம்! தமிழகத்தில் ஜில் ஜில் கூல் கூல்! குட் நியூஸ்!
சென்னை: தமிழகத்தில் மே 20 ஆம் தேதி வரை மழை தொடரும். வரும் 22 ஆம் தேதி அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வரும் 22ம் தேதி அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். தமிழகத்தில் மே 20ம் தேதி வரை மழை தொடரும்.

கிருஷ்ணகிரி, திருப்பத்துார், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, பெரம்பலுார், அரியலுார், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கிருஷ்ணகிரி,தருமபுரி, திருப்பத்துார், வேலுார், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான மழை பெய்யலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது அதிகாலை வேளையில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு உள்ளது. மதிய வேளையில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.
சென்னையில் காலை முதலே வானிலை ஜில் ஜில் என இருக்கிறது. இன்று காலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதையடுத்து திடீரென கிளைமேட் மாறி சென்னையில் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
மதுரவாயல், நெற்குன்றம், வளசரவாக்கம், வானகரம், போரூர், அய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. மழையால் வெயில் குறைந்து இதமான சூழல் நிலவுகிறது. இதனிடையே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, புதுவையில் மாலை 4 மணிக்கு வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மே 4 ஆம் தேதி முதல் கத்திரி வெயில் ஆரம்பித்தது. இந்த அக்னி நட்சத்திரத்தில் எப்போதும் வெயில் கொளுத்தி எடுக்கும் என சொல்வார்கள். ஆனால் கடந்த ஆண்டு கத்திரியே என்னாவென தெரியாத அளவுக்கு மழை பெய்தது. அது போல் தற்போதும் கத்திரி வெயில் காலம் என்றாலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் பூமி குளுமை அடைந்து வெப்பம் தணிந்தது.
அது போல் மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கோடை காலம் இன்றுடன் முடிகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று முதல் மழைக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
தமிழகத்திற்கு இந்த ஆண்டு தனித்துவமான ஆண்டுகளில் ஒன்று என்றே சொல்லலாம். இந்த ஆண்டு தமிழகத்தில் அதிக வெப்ப அலை இல்லை. அது போல் இந்த மே மாதத்தில் சென்னையிலும் வெயிலானது ஒரு நாள் கூட 40 டிகிரி சென்டிகிரேட்டை தாண்டவில்லை. இதே நிலைதான் கடந்த 25 ஆண்டுகளில் 2022, 2018, 2004 ஆகிய ஆண்டுகளில் இருந்தது.
பொதுவாக இது போன்ற வெப்பநிலை இல்லாமை என்பது மே மாதம் இறுதியிலோ அல்லது ஜூன் முதல் வாரத்திலோ இருக்கும். ஆனால் தற்போது மே மத்தியிலேயே இருப்பது இதுதான் முதல் முறை. இதனால் குறைந்த காற்றழுத்தத்தை ஏற்படுத்தும்.
எனவே இந்த மாத இறுதியில் அரபிக் கடல், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாக வாய்ப்புள்ளது. அடுத்த 10 நாட்களில் அரபிக் கடலில் புயல் சின்னம் உருவாகிறது. இந்த ஞாயிற்றுக்கிழமை கிழக்கு- மேற்கு பகுதியில் காற்று சுழற்சியானது வடதமிழகம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு கடலோரங்களில் நெருங்கி வருகிறது. எனவே இனி வரும் நாட்கள் வெப்பமில்லாமல் ஜாலியான நாட்களாக அமையும். இவ்வாறு தெரிவித்தார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications