Low Pressure: அடுத்த 2 மணி நேரம்.. தட தடவென இடி, மின்னலுடன் விட்டு விளாசப்போகும் மழை.. 15 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்றும் நெல்லை, தென்காசி, குமரியில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் தற்போது அடுத்த 2 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.
கோடை வெயில் தமிழகத்தை வாட்டி வதைத்து வருகிறது. நாளுக்கு நாள் உச்சம் தொடும் வெயிலால் மக்கள் தகித்து வருகிறார்கள். மதிய நேரங்களில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவுக்கு வாட்டி வதைக்கிறது வெயில். எனினும் தென் மாவட்டங்கள், கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மாலை நேரங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

நெல்லையில் ஆலங்கட்டி மழை
நேற்றும் நெல்லை, தென்காசி, குமரியில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் இன்றும் மாலை 4 மணியளவில் கனமழை விடாமல வெளுத்து வாங்கியது. குறிப்பாக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் இன்று மாலை 4 மணியளவில் ஆலங்கட்டி மழை கொட்டியது. கொளுத்தும் வெயிலுக்கு இடையே கொட்டிய கனமழையால் ஜில்லென கிளைமேட் மாறியது. இதனால் மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
15 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும்
இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகம் முழுக்க 15 மாவட்டங்களில் விடாமல் மழை வெளுத்துவாங்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அடுத்த 2 மணி நேரத்தில் குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, கோவை, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர் என 15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும் என கூறப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பாதை
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை, சுமார 1.9 உயரத்தில், தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, ஈரோடு, சேலம், நாமக்கல்,தர்மபுரி கிருஷ்ணகிரி மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
6 ஆம் தேதி வரை மழை தான்
02-05-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
03-05-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
04-05-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 5 மற்றும் 6 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.














Click it and Unblock the Notifications