வங்கக் கடலில் Low Pressure! டெல்டா டூ கடலூர் வரை ஹாட்ஸ்பாட்! சென்னையிலும் மழை இருக்கு! வெதர்மேன்
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி, காற்றழுத்த மண்டலமாக மாறியுள்ளதால் வரும் ஜனவரி 9 அல்லது 10 ஆம் தேதி டெல்டா முதல் கடலூர் வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வெதர்மேன் தெரிவித்துள்ளார். அது போல் சென்னை உள்பட 4 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது: "வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ள நிலையில் டெல்டா முதல் கடலூர் வரையிலான மாவட்டங்கள்தான் கனமழைக்கான ஹாட்ஸ்பாட். அதேபோல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்.

வடதமிழகத்திற்கே சிறப்பான மழையை கொடுக்கும். இலங்கையில் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கனமழை பெய்யும். அதையொட்டியுள்ள பட்டிகோலா, திரிகோணமலை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும்.
வரும் 9, 10 ஆம் தேதி நல்ல மழை பெய்யும். ஆனால் டிட்வா போல் இலங்கைக்கு மழை இருக்காது. எனினும் அதீத மழை எச்சரிக்கை இருப்பதால் யாழ்ப்பாணம் பகுதி மட்டும் விழிப்புடன் இருப்பது நல்லது. டெல்டா மாவட்டங்களில் வரும் 9ஆம் தேதியும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் ஜனவரி 10 அல்லது 11 தேதிகளில் கனமழை பெய்யும்.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலும் அதிக மழை இருக்கும். இலங்கை கடற்கரையோரத்தில் உள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர பகுதிகளும் உள் மாவட்டங்களிலும் 9 அல்லது 10 முதல் 13 அல்லது 14 ஆகிய தேதிகளில் மழை பெய்யும்.
கடந்த சில ஆண்டுகளாக ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் வழக்கத்தை விட அதிக பெய்து வருவது ஒரு டிரெண்ட்டாக மாறியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ஜனவரி மாதம் பெய்த மழையின் அளவை பார்க்கலாம்.
2026- 7.8 மி.மீ. (5ஆம் தேதி வரை)
2025- 24.3 மி.மீ. (அதிகம்)
2024- 50.5 மி.மீ. (மிக அதிகம்)
2023 - 5.1 (குறைவு)
2022 - 34.8 (அதிகம்)
2021 - 139.3 (மிக மிக அதிகம்)
தமிழகத்தின் ஜனவரி மாத சராசரி மழையின் அளவு 12.3 மி.மீ. பொதுவாக ஜனவரி மாதம் தமிழகத்திற்கு மிகக் குறைந்த மழை கிடைக்கும். ஆனால் எல்நினோ, லாநினோ ஆகிய ஆண்டுகளால் கடந்த 5 ஆண்டுகளாக ஜனவரி மாதத்தில் தொடர்ந்து அதிக மழை பெய்து வருகிறது.
இந்த ஆண்டு 1 முதல் 5 தேதிகளில் 7.8 மி.மீ. மழை கிடைத்துள்ளது. 9/10 முதல் 13/14 ஜனவரி வரை மேலும் ஒரு மழைச் சுற்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த ஜனவரியும் அதிக மழை வகையிலேயே முடியும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
சென்னையில் ஜனவரி மாதங்களில் வழக்கமாக மிகக் குறைந்த அளவிலான மழையே கிடைக்கும். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் 4 ஆண்டுகள் அதிக மழையுடன் முடிந்துள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில் சென்னையில் ஜனவரி மாத மழை மி.மீ.ரில்:
2026 - 30.0 மி.மீ. (05.01.2026 வரை)
2025 - 39.4 (அதிகம்)
2024 - 65.2 (மிக அதிகம்)
2023 - 4.1 (குறைவு)
2022 - 90.3 (மிக அதிகம்)
2021 - 166.2 (மிக மிக அதிகம்)
சென்னையின் ஜனவரி மாத சராசரி - 16.2 மி.மீ. ஆகும். இந்த ஆண்டும், புத்தாண்டு அன்று பெய்த மழையால் சென்னையில் ஏற்கெனவே அதிக மழை பதிவாகியுள்ளது.
விவசாயிகள் கவனத்திற்கு
டெல்டா (நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சை), கடலூர் ஆகிய மாவட்டங்களும் பிற வட தமிழக பகுதிகளிலும் அதிக மழை பெய்யும். புதுவை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருச்சி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, மதுரை, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் மற்றும் தென் தமிழகத்தின் பிற பகுதிகளில் 9, 10, 11, 12 ஆகிய 4 நாட்களில் 1 அல்லது 2 நாட்கள் மழை பெய்யும். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9ஆம் தேதிக்குள் அறுவடைகளை முடித்துவிடுங்கள். கொங்கு மண்டலத்திலும் மழைக்கு வாய்ப்புள்ளது.
கனமழை எச்சரிக்கை
டெல்டா (நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சை), கடலூர், புதுவை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும். அது போல் வடதமிழகத்தின் பகுதிகள், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய பகுதிகளில் எங்காவது சில பகுதிகளில் மட்டும் கனமழை பெய்யும்.
இலங்கை
வரும் 9ஆம் தேதி பெய்யும் மழையால் இலங்கைக்கு அதிக மழை கிடைக்கும். ஆனால் டிட்வா போல் பெருத்த சேதத்தை ஏற்படுத்தும் மழையாக இருக்காது. இலங்கையின் மிக வடபகுதிகள், குறிப்பாக
யாழ்ப்பாணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிக கனமழை முதல் மிக மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்று குவிதல் (Wind Convergence) அந்தப் பகுதியில் மிகச் சரியாக அமைந்து வருவதால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications