கொடைக்கானல் கூடுதலா குளிருதே.. மதுரையும் மழையில் நனையுதே! கோடையில் குளிர வைத்த வருண பகவான்..!
மதுரை:கோடை வெயில் கொளுத்தி வரும் போதிலும் வருண பகவானின் கருணையால் மதுரை மற்றும் கொடைக்கானலில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இந்த இரு பகுதிகளில் இன்றும் நல்ல மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் மேலும் மழை தொடர வேண்டும் எனவும் அவர்கள் வேண்டிக் கொண்டனர்.
தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதுமே கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில் வெப்ப அலை தமிழகத்தில் மிக அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.

அதிகாலை நேரங்களிலேயே வீட்டில் தங்கி இருக்கும் மக்கள் புழுக்கத்தை உணர முடிகிறது. மேலும் காலை 7 மணியிலிருந்து வெப்பத்தின் தாக்கமானது அதிகரிக்க தொடங்கி விட்டது. இதனால் முதியவர்கள், பச்சிளம் குழந்தைகள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழகத்தில் வெப்பம்: தமிழகத்தில் வெப்ப அலை வீசிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை நூறு டிகிரி பாரஹீட்டை தாண்டி பதிவாகி வருகிறது. அது மட்டும் இல்லாமல் தமிழகத்தின் அதிக இடங்களில் நேற்று வெயில் சதம் அடித்தது. இன்றும் பெரும்பாலான இடங்களில் வெப்ப அலை இல்லாவிட்டாலும் வெப்ப நிலை அதிகரிக்கும், தமிழகத்தில் சமவெளிப் பகுதிகளில் இன்று கூடுதல் வெப்பநிலை இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையமானது எச்சரித்து இருக்கிறது.
மழைக்கு வாய்ப்பு: இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் வருகிற 15ஆம் தேதியும் சில மாவட்டங்களில் கன மழை பெய்ய கூடும் என இந்திய வானிலை மையம் அறிவித்தது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக 15ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கொடைக்கானல்: இந்த நிலையில் அறிவித்தது போலவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக பகல் நேரங்களில் நல்ல வெயிலும் மாலை நேரங்களில் பணியின் தாக்கமும் கொடைக்கானலில் இருந்து வந்தது. இந்த நிலையில் கொடைக்கானல் மேல்நிலைப் பகுதியிலான மன்னவனூர் பூம்பாறை ஆகிய பகுதிகளில் இன்று நல்ல மழை பெய்தது. இதன் காரணமாக குளுமையான சீதோசன நிலை காணப்படுகிறது தற்போது பெய்த மழையால் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை: நேற்று போலவே இன்றும் மதுரையில் நல்ல மழை பெய்தது மதுரை வடக்கு, தல்லாகுளம், கள்ளந்திரி விரகனூர், செல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதேபோல மேலூர், திருமங்கலம் ஏழுமலை, புலிப்பட்டி ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்ததால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications