திருவொற்றியூர் டூ தாம்பரம்! சென்னையை நனைத்த சாரல் மழை.. ஜில்லென்று மாறிய வானிலை
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சென்னையில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. வடசென்னை முதல் தென் சென்னை வரை நகரின் பல பகுதிகளில் அடுத்த 3 மணி நேரம் வரை மிதமான மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழையானது கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தாலும், தமிழ்நாட்டிற்கு போதுமான அளவுக்கு மழையை கொடுத்திருக்கிறது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடந்த ஜூன் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை வழக்கமாக 328.4 மி.மீ மழையை பெறும். இந்த முறை 354 மி.மீ அளவுக்கு மழை பொழிந்திருக்கிறது. எதிர்பார்த்ததைவிட -19% முதல் +19% கூடுதல் குறைவாக மழை பெய்தால் அது இயல்பான அளவு என கணக்கிடப்படுகிறது. அதேபோல திருநெல்வேலி, சென்னை மற்றும் காஞ்சிபுரம் இந்த மூன்று மாவட்டங்கள் இயல்பை விட 60% அதிக அளவு மழையைப் பெற்றுள்ளன.
திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்கள் 20% முதல் 59% வரை அதிக மழையை பெற்றிருக்கின்றன. ஆனால் அதே சமயம் திருப்பூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்கள் வழக்கத்தை விட 20% முதல் 59% வரை குறைவான மழை அளவை பெற்றிருக்கின்றன. மீதமுள்ள 21 மாவட்டங்கள் இயல்பான அளவில் மழையை பெற்றிருக்கிறது.
இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதே போல இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
அண்ணா நகர், கோயம்பேடு, வில்லிவாக்கம், அயனாவரம், பாடி, அம்பத்தூர், ரெட்டேரி, மாதாவரம், திருவொற்றியூர், எண்ணூர், தண்டையார்பேட்டை, புரசைவாக்கம், திருவல்லிக்கேணி,மயிலாப்பூர், கிண்டி, தாம்பரம் என பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
அடுத்த 3 மணி நேரத்தை பொறுத்த அளவில் அயனாவரம், பூவிருந்தவல்லி, சோழிங்கநல்லூர், ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், திருப்போரூர், தாம்பரம், பெரம்பூர், புரசைவாக்கம், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, அம்பத்தூர், மாதவரம், அமைந்தகரை, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாகவே வானம் மேக மூட்டமாகவே காணப்படுகிறது. அவ்வப்போது மழை பெய்து வருவதால் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு குளுமை பரவி வருகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications