சென்னையில் கொட்டித்தீர்த்த கன மழை! சட்டென்று வானிலை மாறியது எப்படி? ஆய்வாளர்கள் சொல்லும் காரணம்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் மழை நீடித்த நிலையில் நேற்று மட்டும் வெய்யில் வாட்டி எடுத்தது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் இடி மின்னலுடன் பலத்த மழை வெளுத்து வாங்கியது. இந்த திடீர் மழைக்கான காரணத்தை வானிலை ஆர்வலர்கள் விளக்கியுள்ளனர்.
குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு - மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக மேட்டூர் தவிர மற்ற அணைகள் எல்லாம் நிரம்பியுள்ளன. ஆனால் வடகிழக்கு பருவமழை தற்போது வரை 10 சதவிகிதம் குறைவாகதான் பெய்திருக்கிறது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நேற்று என்னதான் தமிழ்நாடு முழுவதும் மழை பெய்தாலும், சென்னை பக்கம் மழை எட்டிப பார்க்கவில்லை. இப்படி இருக்கையில் இன்று அதிகாலை தொடங்கி கனமழை வெளுத்து வாங்கியுள்ளது. காலை 4 மணிக்கு தொடங்கிய மழை 5.30 மணியளவில் சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டும் 6 மணி வாக்கில் தொடங்கியது.
வடசென்னையின் திருவொற்றியூர் தொடங்கி, அண்ணாசாலை வரையிலும், அண்ணாநகர், வில்லிவாக்கம், அயனாவரம், பாடி என மத்திய சென்னையிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்க தொடங்கியது. இதன் காரணமாக சென்னையில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
நேற்று வெயில் அடித்த நிலையில், இன்று அதிகாலையிலேயே மழை வெளுத்து வாங்கியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏன் இந்த திடீர் மழை? இந்த மழைக்கு காரணம் என்ன? என்பது குறித்து வானியல் ஆர்வலர்கள் விளக்கமளித்துள்ளனர்.
"வடகிழக்கு பருவமழை காலத்தில் காற்று வடகிலிருந்து கிழக்கு நோக்கி வீசும். இந்த நேரத்தில் வங்கக் கடலில் உள்ள நீர் ஆவியாகி மேலே உயரும்போது இந்த நீராவியை இந்த காற்று கிழக்கு நோக்கி கொண்டு வரும். இப்படி வரும்போது எந்த பகுதியில் அதிக வெப்பம் இருக்கிறதோ அந்த பகுதியில் இது மழையாக பெய்ய தொடங்கும். சென்னையில் இன்று காலை கனமழை பெய்ததற்கான காரணம் இதுதான்.
நேற்று சென்னையில் எந்த இடங்களிலும் மழை பெய்யவில்லை. இதனால் சென்னை முழுவதும் வெப்பம் பரவி இருந்தது. இந்த பகுதியிலிருந்து கிளம்பிய வெப்ப காற்று கடல் நோக்கி நகர்ந்திருக்கிறது. இந்த காற்றும், கடலிலிருந்து நீராவியை கொண்டு வந்த குளிர் காற்றும் ஒன்றோடு ஒன்று மோதி சென்னையில் மழையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செயல்பாடுகள் வரும் 30ம் தேதி வரை தொடங்கும். அதாவது இன்று மழை பெய்யாத இடங்களில் நாளை அதிகாலை திடீர் மழை பெய்யும்" என வானிலை ஆர்வலர் செல்வகுமார் விளக்கியுள்ளார். மேலும் அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 27ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும். இது வலுப்பெற்று 29ம் தேதி காற்றழுத்த மண்டலமாக மாற வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும், என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications