சிவப்பு தக்காளி.. சென்னைக்கு மேகங்களை இழுத்து வரும் மொந்தா புயல்.. இது மட்டும் நடந்தால்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக்கடலில் உருவான 'மொந்தா' புயல், ககிநாடா அருகே அக்டோபர் 28 அன்று பலத்த சூறாவளியாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் பெரிய அளவில் மழை பெய்ய கூட மேகங்களை இழுத்து வரலாம் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

பொதுவாக புயல் கரையை கடக்கும் முன் அதன் கண்ணின் முன் பக்கமும், பின்பக்கமும் மழை மேகங்கள் இருக்கும். வங்கக்கடலில் உருவான 'மொந்தா' புயல் அதேபோல்தான் மேகங்களை இழுத்து வரும். இந்த புயல் ஆந்திராவில் கரையை கடந்தாலும் மேகங்கள் சென்னை அருகே வர வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதிக அளவு மேகங்களை இந்த வங்கக்கடலில் உருவான 'மொந்தா' புயல் இழுத்து வர வாய்ப்புகள் உள்ளன. இதனால் சென்னையில் கனமழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன.

weather cyclone

ஒடிசா - ஆந்திர பிரதேசம்

கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பு எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இடமாற்றம் மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மொந்தா புயலாக வலுப்பெற்றுள்ளது. இது அக்டோபர் 28 அன்று ஆந்திரக் கடற்கரையைத் தாக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. கடந்த ஆறு மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து வடமேற்கு திசையில் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்துள்ளது.

அக்டோபர் 27 அன்று அதிகாலை 5:30 மணிக்கு, புயல் 12.2°N அட்சரேகை மற்றும் 85.3°E தீர்க்கரேகையில் மையம் கொண்டிருந்தது. இது சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 560 கி.மீ., ககிநாடாவிற்கு தென்கிழக்கே 620 கி.மீ., விசாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 650 கி.மீ., கோபால்பூருக்கு தெற்கே 790 கி.மீ., போர்ட் பிளேருக்கு மேற்கே 810 கி.மீ. தொலைவில் உள்ளது.

IMD-யின் சமீபத்திய அறிக்கையின்படி, மொந்தா புயல் அடுத்த 12 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறும். அதன் பின்னர், வட-வடமேற்கு திசையில் ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகரும். ககிநாடா அருகே மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே அக்டோபர் 28 அன்று மாலை அல்லது இரவு புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயலால் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று, கனமழை, கடல் கொந்தளிப்பு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேச அரசு, நிவாரணம், அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் மற்றும் அவசரகால மேலாண்மை என பலதரப்பட்ட நடவடிக்கைகளை உள்ளடக்கிய ஒரு முழுமையான செயல் திட்டத்தை அறிவித்துள்ளது.

மொந்தா புயல் தீவிரம்

தற்போது, புயல் சென்னைக்கு தென்கிழக்கே 780 கி.மீ., விசாகப்பட்டினம் மற்றும் ககிநாடாவிற்கு தென்கிழக்கே 830 கி.மீ., கோபால்பூருக்கு தென்கிழக்கே 930 கி.மீ. தொலைவில் உள்ளது.

இது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் வீசும் காற்று மின் கம்பங்களை சேதப்படுத்தலாம் மற்றும் மரங்களை வேரோடு சாய்க்கலாம். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். குப்பைகளை அகற்றும் பணிகளுக்காக கிரேன் மற்றும் மரம் வெட்டும் இயந்திரங்கள் கடலோர மண்டலங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

மின்சாரத்தை விரைவாக மீட்டெடுக்க சுமார் 3,000 புதிய மின் கம்பங்கள் தயாராக உள்ளன. ஒடிசாவில், புயல் மொந்தா கரையை நோக்கி வருவதால், பாதிக்கப்படக்கூடிய மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணியை அரசு தொடங்கியுள்ளது. எட்டு தெற்கு மாவட்டங்களில் 128 பேரிடர் மீட்புக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அக்டோபர் 28 திங்கட்கிழமை மாலை 5 மணிக்குள் மால்காங்கிரி, கோராபுட், நவரங்கபூர், ராயகடா, கஜபதி, கஞ்சம், கந்தமால், கலஹண்டி மாவட்டங்களில் வெளியேற்றும் பணிகள் நிறைவடையும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+