என்னங்க இது? சென்னையில் அதிகாலையில் வெளியே வந்து பார்த்தவர்களுக்கு ஷாக்.. வானிலை இப்படி குழப்புதே!
சென்னை: சென்னையில் திடீரென வானிலை இன்று மாற்றம் அடைந்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் மிக கனமழை பெய்த நிலையில் தற்போது சாலையே தெரியாத அளவிற்கு பனிமூட்டமாக உள்ளது.
சென்னையின் பல பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. காலையில் சாலையில் ஏற்பட்ட பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர். திங்கள் கிழமை வரை மிக கனமழை பெய்தது.

கடுமையான புயல் அடித்தது. ஆனால் இப்போது திடீரென பனி பொழிகிறது. இதை பார்த்து மக்கள் கடுமையாக குழப்பம் அடைந்துள்ளனர். என்னங்க இது இப்படி திடீரென வானிலை மாறி உள்ளது என்று கடுமையாக குழப்பம் அடைந்துள்ளனர்.
என்ன காரணம் ?: மிக்ஜாம் புயல் கடந்த நிலையில் குளிர்ந்த காற்று சென்னையை நோக்கி வரும். வங்கக்கடலில் இருந்து குளிர்ந்த காற்று புயலை தொடர்ந்து வரும்.
இந்த குளிர்ந்த காற்று சென்னையில் பனிப்பொழிவை அதிகரிக்கும். அதேபோல் குளிரை கூட்டும். பனிமூட்டமாக இருக்கும். இதனால் சென்னையில் தற்போது ஊட்டி போன்ற வானிலை நிலவி வருகிறது.
அடுத்த 10 நாட்கள்: இனி சில நாட்களுக்கு சென்னையில் பனி வாட்டி எடுக்க வாய்ப்புகள் உள்ளன. சென்னையை மிக்ஜாம் புயல் புரட்டி எடுத்த நிலையில்.. அடுத்த 10 நாட்களுக்கு சென்னையில் வானிலை எப்படி இருக்கும் என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு கணிப்பு வெளியிட்டு உள்ளது.
அதில், சென்னையால் மறக்க முடியாத பெயராக இனி மிக்ஜாம் புயல் இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக, சென்னையைச் சுற்றியுள்ள ஒவ்வொரு மழை நிகழ்வும் 2015 சென்னை வெள்ளத்துடன் ஒப்பிடப்பட்டது, இனி 2023 புதிய ஒப்பீட்டு அளவுகோலாக மாறக்கூடும். இதுதான் இனி பென்ச்மார்க்.
ஏனெனில் டிசம்பர் 4 மற்றும் 3 தேதிகளில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 24 மணி நேரத்தில் 40 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மட்டுமின்றி, கூவம், ஆரணியாறு, கொசஸ்தலையாறு போன்ற ஆறுகளின் மேல்நிலை நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்தது. டிசம்பர் 4 நள்ளிரவில் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு 40,000 கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்தது. மிக்ஜாம் புயல் சென்னை கடற்கரையை நெருங்கிய போது மழை எவ்வளவு கனமாகவும் பரவலாகவும் இருந்தது என்பதைக் குறிக்கிறது.
ஒடிசா, சத்தீஸ்கர். வடக்கு நகரும் சுழற்சியின் தாக்கத்தால், தற்போது தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் தற்காலிக மேற்குக் காற்று வீசுவதால், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதைத் தடுக்கும். இதனால் மழை குறையும். அடுத்த இரண்டு நாட்களில், மேற்கு திசையில் இருந்து காற்று வீசுவதைக் காணலாம், இது வட தமிழகத்தின் சில பகுதிகளின் மீது வடகிழக்கு திசையைத் திருப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் சென்னை போன்ற இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு குறைவு.
மழை வாய்ப்பு: இன்னும் முன்னோக்கிப் பார்த்தால், வரும் நாட்களில் தென் அரேபிய கடல் மற்றும் லக்கேடிவ் கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு உள் தமிழகத்தின் சில பகுதிகளுடன் அடுத்த வாரத்தில் மழைக்கு சாதகமாக இருக்கலாம்.
இதனால் வரும் சில நாட்களில் சென்னை உட்பட வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு குறைவு. லேசான மழையைத் தவிர மற்ற எல்லா பெரிய மழையும் அடுத்த வாரம் அல்லது அடுத்து10 நாட்களுக்கு சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்யாது. டிசம்பர் 11 முதல் 18 வரையிலான வாரத்திற்கான மழைப்பொழிவு பெரிதாக இருக்காது என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு கூறியுள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications