5 மாதங்களுக்கு பின் பெங்களூரில் கனமழை! இன்னும் 2 வாரத்திற்கு கொண்டாட்டம் தான்- வெதர்மேன் குட் நியூஸ்
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் பல மாதங்களுக்குப் பிறகு நல்ல மழை பெய்து வரும் நிலையில், வரும் நாட்களிலும் இது தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
நமது அண்டை மாநிலமான கர்நாடக தலைநகர் பெங்களூரில் கடந்த பல வாரங்களாகவே மிக மோசமான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதனால் அங்குப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

வெயில்: கர்நாடகாவில் பல்வேறு பகுதிகளிலும் பருவமழை பொய்த்துப் போனதே அங்கு இந்தளவுக்குத் தண்ணீர் பஞ்சம் ஏற்பட முக்கிய காரணமாகும். தண்ணீர் பஞ்சத்தைச் சமாளிக்கக் கர்நாடக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் தண்ணீர் பயன்பாட்டிற்கும் கூட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல வாரங்களாகவே அங்குத் தண்ணீர் பஞ்சம் மோசமாக இருக்கும் நிலையில், அதீத வெயிலும் படாய் படுத்தி வருகிறது..
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே சுமார் 5 மாதங்கிக்குப் பிறகு கர்நாடக தலைநகர் பெங்களூரில் நேற்று மாலை முதல்முறையாக மழை பெய்துள்ளது. பனசங்கரி, விஜயநகர், அல்சூர், இந்திராநகர் மற்றும் பிரேசர் டவுன் போன்ற பகுதிகளில் மழை பெய்தது. பெங்களூரில் நேற்றிரவு 8.45 மணி வரை 4.3 மிமீ மழை பெய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
நிம்மதி: பெங்களூரில் கடந்தாண்டு நவம்பர் 23ஆம் தேதி கடைசியாக மழை பெய்தது, அதன் பின்னர் பெங்களூரில் வறண்ட வானிலையே நிலவியது. பல நாட்கள் அங்கு வெப்பமும் மிக மோசமான நிலைக்கு சென்றது. இந்தச் சூழலில் தான் பல மாதங்களுக்குப் பிறகு அங்கு இப்போது மழை பெய்துள்ளது. இதனால் பெங்களூரில் வெப்பம் சற்று குறைந்துள்ளது. இதனால் பெங்களூர்வாசிகள் கொஞ்சம் நிம்மதி அடைந்துள்ளனர்.
வெதர்மேன்: இதற்கிடையே பெங்களூரில் நிலவும் வானிலை தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். பெங்களூரில் பரவலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், பெங்களூரில் அடுத்த 2 வாரங்களில் மேலும் பல புயல்கள் வர உள்ளது என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இப்போது பெங்களூரில் மழை பெய்து வரும் நிலையில், இதனால் நகரில் வெப்பம் கணிசமாகக் குறைந்துள்ளது. வரும் காலத்தில் அங்கு மேலும் மழை பெய்யும் என்பதால் பெங்களூர் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

5 மாதங்களுக்குப் பிறகு: பெங்களூரைப் பொறுத்தவரை சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு அங்கு மழை பெய்துள்ளது. வழக்கமாகப் பெங்களூரில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மழை 205.1 மிமீ மழை பெய்யும். ஆனால், இந்தாண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் மழையே பெய்யவில்லை.
கடந்த ஏப்ரல் 19, 20 தேதிகளில் பெங்களூரில் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்து இருந்தது. இருப்பினும், பெங்களூரில் உள்ள பெங்களூரு சிட்டி, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் மற்றும் எச்ஏஎல் விமான நிலையம் ஆகிய 3 பகுதிகளிலும் வானிலை மையம் வெளியிட்ட தகவலில் மழை இல்லை என்றே இருந்தது. அதேபோல ஏப்ரல் 20ஆம் தேதியும் 0.2 மிமி-க்கு குறைவான மழையே பெய்ததால் அன்றும் மழை ஜீரோ என்றே பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications