முல்லைப் பெரியாறு அணை 138 அடியை தாண்டியது- இன்று 1,000 கன அடிநீர் திறப்பு- வெள்ள அபாய எச்சரிக்கை!
கூடலூர்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை தாண்டிய நிலையில் இன்று அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடிநீர் திறக்கப்பட உள்ளது. இதனையடுத்து கேரளாவின் இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டமானது 152. ஆனால் இவ்வளவு நீரை தேக்க கேரளா எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்க அனுமதி கிடைத்தது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீர் கேரளா மாநிலத்துக்குள்தான் செல்கிறது. இதனால் இடுக்கி மாவட்டம் பாதிக்கப்படும் என்பது கேரளாவின் கவலை.

தற்போதைய வடகிழக்கு பருவமழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்து வந்தது. முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 136 அடியை எட்டிய நிலையில் முதல் கட்ட அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் மழை சற்று குறைந்ததால் முல்லை பெரியாறு அணை நீர்மட்டமும் குறைந்தது.
ஆனால் மேற்கு தொடர்ச்சி மலைகளில் வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்ததால் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 138 அடியானது. இதனையடுத்து கேரளாவின் இடுக்கி மாவட்டத்துக்கு நேற்று 2-வது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் மதகுகள் இன்று காலை திறக்கப்பட்டு வினாடிக்கு 1,000 கன அடிநீர் வெளியேற்றப்பட உள்ளது. 2 ஆண்டுகளுக்குப் பின்னர் முல்லைப் பெரியாறு அணையின் மதகுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுகிறது. இதனையடுத்து கேரளாவின் இடுக்கி உள்ளிட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
நெல்லை, குமரி, தேனியில் இன்று கனமழை எச்சரிக்கை.. சென்னையிலும் இரவில் மழைக்கு வாய்ப்பு! வானிலை அலர்ட் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே!












Click it and Unblock the Notifications