அப்பாடா! இன்னும் ஒரு வாரத்திற்கு.. சுட்டெரிக்கும் வெயிலுக்கு இடையே வெதர்மேன் கொடுத்த அப்டேட்
சென்னை: தமிழகத்தில் வெயில் உக்கிர தாண்டவம் ஆடும் நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு வெப்ப நிலை இயல்பான அளவு முதல் இயல்பை விட குறைவாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கோடை வெயில் தனது உக்கிரத்தை காட்ட தொடங்கிவிட்டது. மக்கள் பகல் நேரத்தில் வெளியில் சென்று விட்டு வருவற்குள் போதும் போதும் என ஆகிவிடுகிறது. தமிழ்நாடு முழுவதுமே இந்த ஆண்டு வெப்பம் அதிகமாக உள்ளது. தலைநகர் சென்னையிலும் இரவு நேரத்திலும் உஷ்ணம் அதிகமாக உள்ளது.

கடந்த சில நாட்களாக அதிகமாக இருந்து வந்த வெப்பம் இன்று சற்று தணிந்து இருந்தது. எனினும், இன்று 9 இடங்களில் வெப்பம் 100 டிகிரியை தாண்டி பதிவாகியிருந்தது. அதிகபட்சமாக திருப்பத்தூரில் 106.8 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்தது. ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், மதுரை, வேலூர், தருமபுரி, பாளையங்கோட்டை ஆகிய இடங்களிலும் வெப்பம் 100 டிகிரியை தாண்டி பதிவானது.
இதனிடையே, அடுத்த ஒருவாரத்திற்கு சென்னையில் வெப்பம் இயல்பான அளவு முதல் இயல்பை விட குறைவாக வெப்பம் இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தனியார் வானிலை ஆய்வாளாரான பிரதீப் ஜான் தனது எக்ஸ்தளத்தில் கூறியிருப்பதாவது:-
அடுத்த ஒரு வாரத்திற்கு சென்னையில் வெப்பம் இயல்பான அளவு முதல் இயல்பை விட சற்று குறைவானதாக இருக்கும். கொங்கு/ உள் தமிழகத்திலும் வெப்ப நிலை குறைய தொடங்கும். 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான இடத்தில் 37/39 டிரீ செல்சியஸ் ஆக குறையும். தமிழ்நாட்டில் தேர்தல் வரை வெப்ப அலைக்கான வாய்ப்பு குறைவு" என்று பதிவிட்டுள்ளார்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications