வங்கக் கடலில் திடீர் மாற்றம்.. தமிழகத்திற்கு பறந்த எச்சரிக்கை! 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
சென்னை: வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருக்கிறது. இந்நிலையில், இன்று தமிழகத்தில் நீலகிரி, தேனி உட்பட 6 மாவட்டங்களில் மழை கொட்டி தீர்க்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்கக்கடலின் வடகிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என்றும், மேற்கு வங்கம்-வங்கதேசத்தில் கரையை கடக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "வங்கக்கடலை போலவே, மகாராஷ்டிரா கேரளா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.
எனவே இன்று (ஜூலை.25) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். குறிப்பாக,
நீலகிரி
தேனி
தென்காசி
கன்னியாகுமரி
கோயம்புத்தூர்
திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை.26ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை.27ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை.28ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூலை.29 மற்றும் 30ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (25-07-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் பருவமழை எப்படி இருக்கிறது?
தமிழகத்தில் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 24-ம் தேதி வரை சராசரியாக 96.3 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது. சராசரியாக இந்த காலத்தில் 103.0 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருக்க வேண்டும். அந்த வகையில் தற்போது பதிவாகி இருக்கும் மழையின் அளவு இல்பை விட -6 சதவீதம் குறைவாகும்.
இந்த காலகட்டத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 127.5 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்து இருக்கிறது. மாவட்டத்தில் இயல்பான மழை அளவு 35.9 மில்லி மீட்டர் மட்டுமே. அந்த வகையில் தற்போது வரை பெய்திருக்க கூடிய மழை 255 சதவீதம் இயல்பை விட அதிகமானதாகும். திருநெல்வேலியை தொடர்ந்து தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் தலா 93 சதவீதம் அளவுக்கு மழை இயல்பை விட அதிகமாக பெய்து இருக்கிறது. திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை எதிர்பார்த்ததை விட குறைவாகவே பெய்திருக்கிறது.
-
கோடையில் கொட்டும் கனமழை.. அடுத்த 2 நாட்களுக்கு விடவே விடாது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை -
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூரை மொத்தமாக நனைத்த கோடை மழை.. மதியம் வரைக்கும் 104 டிகிரி வெயில்.. மாலையில் கனமழை! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications