சென்னை, மதுரையில் திறந்தவெளி கட்டுமான பணிகளுக்கு தடை.. ஏன் என்னாச்சு?
சென்னை: சென்னை மற்றும் மதுரையில் திறந்தவெளி கட்டுமான பணிகளுக்கு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெப்ப அலை காரணமாக நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்க ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ். கரைசல்களை தயார் நிலையில் வைத்திருக்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

கோடை காலம் தொடங்கியதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள நீர் மோர், ஜூஸ், தாகம் எடுக்காவிட்டாலும் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், இணை நோய் உள்ளவர்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெயிலில் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தமிழகத்திற்கு தொடர்ந்து வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு வந்தன.
அத்துடன் தமிழகத்தில் கடந்த 4ஆம் தேதி முதல் கத்தரி வெயிலும் தொடங்கியது. இது மே 28ஆம் தேதி வரை 25 நாட்களுக்கு இருக்கும். இந்த சூழலில் கட்டட பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் அதிக வெப்ப அலையால் வெப்ப வாதம் எனப்படும் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்படுகிறார்கள். சிலர் உயிரிழக்கவும் செய்கிறார்கள்.
இந்த நிலையில் அதிக வெப்பம் காரணமாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து வகை திறந்தவெளி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் மதுரையில் மேற்கண்ட நேரத்தில் எந்த வகையான திறந்தவெளி கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள கூடாது என அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வெயிலில் தொழிலாளர் உடல்நலன் பாதிக்கப்படுவதை தடுக்க தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்குநர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதன் மூலம் சுட்டெரிக்கும் வெயிலால் கட்டுமான தொழிலாளர்களின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு மே மாதம் இறுதி வரை திறந்தவெளி கட்டுமான பணி நடக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த அதிகாரிகளுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications