ரெடி?.. வெளியே வராதீங்க, அவசரத்துக்கு 100 இருக்கு.. 24 மணி நேரமும் நாங்க ரெடி.. சென்னை போலீஸ் அதிரடி
சென்னை: தமிழகத்தின் முக்கிய மழை ஆதாரமான வடகிழக்கு பருவமழை, வரும் அக்டோபர் 23 முதல் தொடங்க உள்ள நிலையில், சென்னை போலீசார் முக்கிய அறிவிப்பு ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

அரபிக்கடலில் புயல் உருவாகி உள்ளது.. இந்த புயலுக்கு தேஜ் என்ற பெயரை வைக்க இந்தியாவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் மேலும் தீவிரமடைந்து தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
மிதமான மழை: அதேபோல் வங்கக்கடல் பகுதியிலும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 23ம் தேதி காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் மிதமான மழையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், இன்றைய தினம் சென்னை உள்ளிட்ட சுற்றியுள்ள மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இன்று காலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது..
காலையில் மழை: அதேபோல, ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், குன்றத்தூர், தாம்பரம், வண்டலூர், எழும்பூர், அமைந்தகரை, கிண்டி, மாம்பலம், மதுரவாயல், பூந்தமல்லி, அம்பத்தூர் பகுதிகளிலும், பலத்த மழை பெய்தது.
பருவமழை துவங்கியுள்ள நிலையில், இந்த மழை தொடர்ந்து நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. பருவமழையை முன்னிட்டு சென்னை காவல்துறை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளது. அதில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றும் சென்னை காவல்துறை வலியுறுத்தியிருக்கிறது. அந்த பதிவு இதுதான்:

"மழைக்காலத்திற்கு தயாராக இருங்கள்"
* பலத்த காற்று அல்லது புயலின் போது விழும் அல்லது உடைந்து போகக்கூடிய உங்கள் மரங்கள் மற்றும் கிளைகளை வெட்டுங்கள்.
* மின் கம்பங்கள் அல்லது கம்பிகளுக்கு அருகில் மரங்களை நடுவதை தவிர்க்கவும்.
* கனமழை அல்லது இடியுடன் கூடிய மழையின் போது வெளியே செல்வதை தவிர்க்கவும்.
* நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தால், பொது போக்குவரத்து அல்லது நம்பகமான வாகனத்தைப் பயன்படுத்தவும்.
* இடி, புயலின் போது எலக்ட்ரானிக் சாதனங்களை துண்டிக்கவும்.
* மின்கம்பங்கள், கம்பிகள், உலோகப் பொருள்கள் அல்லது மின்னலை ஈர்க்கக்கூடிய கட்டமைப்புகளிலிருந்து விலகி இருங்கள்.
* விழுந்து கிடக்கும் கம்பிகள் அல்லது கம்பிகளைத் தொடாதீர்கள்.
* உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள்.
* நீங்கள் இருக்கும் இடம் மற்றும் பாதுகாப்பு நிலை குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கவும்.
* சாலையில் மெதுவாகவும் கவனமாகவும் ஓட்டவும், வாகனம் ஓட்டும் போது, உங்கள் பிரேக்குகளை சரிபார்க்கவும். தண்ணீர் தேங்கிய சாலையில் வாகனம் ஓட்ட வேண்டாம். உங்கள் வைப்பர்களைச் சரிபார்க்கவும். மரத்தடியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம். உங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.
* வானிலை அறிவிப்புகள் மற்றும் அதிகாரிகளின் எச்சரிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.
* சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை கண்டு நம்ப வேண்டாம்.
* அவசர நிலைகளுக்கு 100ஐ அழைக்கவும்.
* மாவட்ட பேரிடர் மீட்புப் படை (DDRF) குழு எந்த ஒரு துயரச் சூழலையும் கையாள தயாராக உள்ளது.
* காவல்துறை ரோந்து மற்றும் அதிகாரிகள் மற்றும் ஆட்கள் உங்களுக்கு சேவை செய்ய 24 மணி நேரமும் தயாராக உள்ளது" என்று ஃபேஸ்புக் பக்கத்தில் சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டிருக்கிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications