வழக்கத்திற்கு மாறான அளவில் பெய்த வடகிழக்கு பருவமழை.. இது பத்தாது! வானிலை ஆய்வு மையம் சொன்ன தகவல்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இருப்பினும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 9% குறைவாகத்தான் பெய்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மேட்டூர் அணை தவிர பெரும்பாலான அணைகள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. குறிப்பாக தென் மாவட்டங்களான திருநெல்வேலியில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு உள்ளிட்ட அணைகளும், தென்காசியின் கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் உள்ளிட்ட அணைகளும் நிரம்பியுள்ளன.

அதேபோல சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட ஏரிகளும் நிரம்பியுள்ளன. கொங்கு மண்டலத்தில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் மற்றும் அணைகள் நிரம்பியுள்ளன. இருப்பினும் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 9% குறைவாக பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதாவது அக்.1 முதல் இன்றுவரை இயல்பாக 346.மி.மீ மழை பதிவாகி இருக்க வேண்டும். ஆனால் 316.3 மிமீ மட்டுமே பெய்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்று திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
மேலும், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், டிசம்பர் ஒன்றாம் தேதி புயலாகவும் வலுப்பெற கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் கடலோரப் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசையில் ஒடிசா கடற்கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் இன்று சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்டானது விடுக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்பதால் நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications