மீண்டும் தீவிரமெடுக்கும் வடகிழக்கு பருவமழை.. தீபாவளிக்கு மழை இருக்குமா? வெளியான முக்கிய அப்டேட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி தீவிரமடையும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். குறிப்பாக தீபாவளிக்கு நல்ல மழை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டு சூப்பர் எல்-நினோ ஆண்டு என்பதால், தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை. இதனால் தமிழ்நாட்டில் இயல்பை விட குறைவான அளவில் மழை பதிவாகி இருந்தது.

Northeast Monsoon

நிலைமை இப்படி இருக்கையில்தான், வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. ஆரம்பம் முதல் இயல்பை விட கூடுதலான மழைப்பொழிவை கொடுத்தது. தற்போது சிறிய இடைவெளியை எடுத்திருக்கிறது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு மற்றும் உள் தமிழகத்தில் குறிப்பாக.. கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம், திண்டுக்கல் மற்றும் அதை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில்.. பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல, தெற்கு கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய கேரளா பகுதிகளில்.. கடுமையான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, நவம்பர் 6ஆம் தேதி.. அதாவது வரும் வெள்ளிக்கிழமை முதல், வடக்கு கிழக்கு பருவமழை மீண்டும் வேகம் எடுக்கும்.

ஈரமான கிழக்கு காற்று, வங்க கடலில் வலுப்பெற்று.. ஈரப்பதத்தை தமிழக கடற்கரையை நோக்கி தள்ளும். இப்படி நடக்கும்போது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை முதல் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மழை சில இடங்களில் மிதமானதாகவும், சில இடங்களில் கனமழையாகவும் இருக்கும். குறிப்பாக மாலை, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மழை அதிகரிக்கும்.

தெற்கு வங்கக்கடலில் குறிப்பிடத்தக்க ஈரப்பதம் இருக்கிறது என்பதால், தீபாவளி காலத்தில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் உள் மாவட்டங்களில் மழை பொழிவின் தீவிரம் மாறுபடும். ஒட்டுமொத்தமாக வடகிழக்கு பருவமழை இன்னொரு ரவுண்டு மழையை கொண்டு வருவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+