இந்தியாவில் 69,141 வாக்குகளை எண்ண 57 மணி நேரம்! ஆனால் அமெரிக்காவில் மட்டும் சில மணி நேரத்தில் எப்படி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: நம்ம ஊரை போல இல்லாமல் அமெரிக்காவில் வாக்குச்சீட்டு முறையிலேயே தேர்தல் நடக்கிறது. ஆனாலும், அங்கு பல கோடி வாக்குகள் வெறும் சில மணி நேரங்களிலேயே எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிவிட்டன. அந்தளவுக்கு வேகமாக வாக்குகள் எப்படி எண்ணப்படுகிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

அமெரிக்காவில் நேற்று நவம்பர் 3ம் தேதி மிட் டேர்ம் தேர்தல் எனப்படும் இடைக்கால தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் நடந்து சில மணி நேரங்களிலேயே தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பித்தது. அமெரிக்காவில் இந்தியாவை போல வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் நேரடியாக வாக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை.

US world US mid term US Mid term election

வாக்குச்சீட்டுகள்

பெரும்பாலான இடங்களில் வாக்குச்சீட்டுகளே பயன்படுத்தப்படுகின்றன. அப்படியிருக்கும் போது அங்கு இவ்வளவு சீக்கிரம் வாக்கு எண்ணிக்கை எப்படி நடக்கிறது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற பீகார் சட்ட மேலவை தேர்தலில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட்டபோது, சில தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை பல நாட்கள் நீடித்தது. ஒரு தொகுதியில் வெறும் 69,141 வாக்குகளை எண்ணுவதற்கே 57 மணி நேரம் ஆனது. ஆனால் அமெரிக்காவில் சுமார் 10 கோடி வாக்குகள் சில மணி நேரங்களிலேயே எண்ணப்பட்டுவிட்டன. அங்குள்ள தொழில்நுட்பமும் தேர்தல் நடைமுறைகளும்தான் முக்கியக் காரணங்கள்.

எப்படி?

அமெரிக்காவில் பெரும்பாலான வாக்காளர்கள் தங்களுக்கு பிடித்த வேட்பாளரின் பெயருக்கு அருகே உள்ள வட்டம் அல்லது பெட்டியில் குறியிட்டு வாக்களிக்கின்றனர். பின்னர் அந்த வாக்குச்சீட்டு ஸ்கேனிங் இயந்திரத்தில் செலுத்தப்படுகிறது. வாக்குச்சாவடியிலேயே அல்லது தனி வாக்கு எண்ணும் மையத்திலேயே இந்த ஸ்கேனிங் நடைபெறும். அந்த இயந்திரம் வாக்குச்சீட்டை ஸ்கேன் செய்து யாருக்கு வாக்களித்துள்ளனர் என்பதை தானாகவே கணக்கிடுகிறது.

பெரிய மையங்களில் உள்ள அதிவேக ஸ்கேனர்கள் ஒரு மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான வாக்குச்சீட்டுகளை எண்ணும் திறன் கொண்டவை. அங்குள்ள பெரும்பாலான தொகுதிகளில் இதுபோல வாக்கு எண்ணும் இயந்திரங்கள் மூலமாகவே வாக்குகள் எண்ணப்படுகின்றன.

வாக்கு எண்ணிக்கை

அமெரிக்காவில் வாக்கு எண்ணிக்கை விரைவாக நடைபெறுவதற்கு மற்றொரு முக்கியக் காரணம், தேர்தல் நாளுக்கு முன்பே பல பணிகள் தொடங்கிவிடுவதுதான். அங்கு வாக்குப்பதிவு நாள் என்று ஒன்று இருந்தாலும் கூட அதற்கு முன்பே பெரும்பாலான மாகாணங்களில் மக்களால் வாக்களிக்க முடியும். வாக்குச்சாவடிகளில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ வாக்குகளை செலுத்தலாம்.

இதுபோல பதிவாகும் வாக்குகள் பெரும்பாலான மாகாணங்களில் தேர்தல் நாளுக்கு முன்பே பரிசோதித்து, ஸ்கேனிங் செய்து வைத்திருப்பார்கள். எனவே, வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் சட்டென முடிவுகள் வர ஆரம்பிக்கும். மேலும், அமெரிக்கா முழுவதும் ஒரே இடத்தில் வாக்குகள் எண்ணப்படுவதில்லை. நாடு முழுவதும் 10,000க்கும் மேற்பட்ட பகுதிகளில் தனித்தனியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. பல நூறு இடங்களில் இயந்திரங்கள் மூலம் வாக்குகளை எண்ணுகின்றன. பின்னர் அந்தந்த முடிவுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

அமெரிக்க ஊடகங்கள்

மேலும், நம்ம ஊரை போலவே அமெரிக்க ஊடகங்கள் முன்கூட்டியே முடிவுகளை அறிவித்துவிடும். உதாரணமாக ஒரு வேட்பாளர் ஒரு லட்சம் வாக்குகள் முன்னிலையில் இருக்கும்போது, எண்ணப்படாமல் மீதமிருப்பது 20 ஆயிரம் வாக்குகள் மட்டுமே என்றால், எதிர்த்து போட்டியிட்டவர் வெற்றி பெற முடியாது. இதன் அடிப்படையில் வெற்றியாளர் அறிவிக்கப்படுகிறார். இவை அதிகாரப்பூர்வ முடிவுகள் அல்ல என்றாலும் உறுதியான முடிவுகள் தான்!

சுருக்கமாக சொன்னால், அமெரிக்காவில் வாக்குகள் காகிதத்தில் பதிவானாலும், எண்ணிக்கை இயந்திரங்கள் மூலமாகவே நடக்கிறது. மேலும், முன்கூட்டியே வாக்குப்பதிவு செய்யும் வசதி, முன்கூட்டியே ஸ்கேனிங், பல ஆயிரம் மையங்களில் வாக்குகள் எண்ணப்படுவது ஆகியவையும் சீக்கிரம் முடிவுகள் வர காரணமாக உள்ளன. இவை பெரும்பாலும் இரவில் அறிவிக்கப்படும் வெற்றியாளர் பெரும்பாலும் கணிக்கப்பட்ட வெற்றியாளர்தான்; அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்கள் ஆகலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+