உங்களுக்கு கட்சி – அரசியல் எல்லாம் தேவையில்லை – விருது பெற்ற மாணவர்களிடம் நேரடியாக சொன்ன விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ''இப்போது உங்களுக்கு கட்சி, அரசியல் எல்லாம் தேவையில்லை. நல்லா படிங்க.. நல்ல உயரத்துக்கு போங்க. உங்களுக்கு பிடித்தமான வாழ்க்கையை போங்க. அதன்பிறகு நம்முடைய ஊர், சமூகம், தமிழ்நாட்டை பற்றி யோசிங்க. உங்களை நம்பி தான் பெற்றோர்கள் இருக்காங்க'' என்று தவெக கல்வி விருதுகள் பெற்ற மாணவ-மாணவிகள் மத்தியில் முதல்வர் விஜய் பேசினார்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தொடர்ந்து 4வது ஆண்டாக 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா இன்று நடந்தது.

tamilaga vettri kazhagam

சென்னையை அடுத்த நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் நடந்த விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்று அனைவருக்கும் பாராட்டு சான்று, சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.

முதற்கட்டமாக, அரியலூர், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மாணவ-மாணவிகள் தங்களின் குடும்பத்துடன் சென்று முதல்வர் விஜய்யிடம் விருது வாங்கி போட்டோ எடுத்து கொண்டனர். இந்த விழாவில் முதல்வர் விஜய் பேசியதாவது:

''நான் முதல் அமைச்சராக இங்கு வரவில்லை. எப்போதும் போல உங்களின் அண்ணனாக தான் இங்கு வந்திருக்கிறேன்.உங்களுக்காக தான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். விஜய் அரசியல் பேசப்போகிறாரோ என்று நினைக்கலாம். 2029 தேர்தலுக்கு தயார் செய்கிறாரோ என்று நினைக்கலாம். ஆனால் நான் இங்கு அரசியல் பேச வரவில்லை. ஓட்டு கேட்டும் வரவில்லை. கட்சி பற்றியும் பேசவில்லை.

இப்போது உங்களுக்கு கட்சி, அரசியல் எல்லாம் தேவையில்லை. நல்லா படிங்க.. நல்ல உயரத்துக்கு போங்க. உங்களுக்கு பிடித்தமான வாழ்க்கையை போங்க. அதன்பிறகு நம்முடைய ஊர், சமூகம், தமிழ்நாட்டை பற்றி யோசிங்க. உங்களை நம்பி தான் பெற்றோர்கள் இருக்காங்க. நானும் உங்களை நம்பி தான் இருக்கிறேன். ஏன் தமிழ்நாடே உங்களை நம்பித்தான் இருக்கு.

உங்களுக்கு அட்வைஸ் எல்லாம் தேவையில்லை. ஏனென்றால் நீங்கள் அட்வான்ஸாக யோசிக்க ஆரம்பித்துவிட்டீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் தனித்தன்மையை வளர்த்துக்கோங்க. ஏனென்றால் தனித்தன்மையோரு இருந்தால் பலருக்கும் பிடிக்காது.

எப்படிடா அதற்கு தடை போடலாம் என்று முயற்சிப்பார்கள். ஆனால் தடை போட்டால் கவலை வேண்டாம். எப்போதெல்லாம் தடைகள் வருதோ, எப்போதெல்லாம் உங்களை தடுக்க நினைக்கிறார்களோ.. அது வேறு ஒன்றுமில்லை. நீங்கள் ஜெயிக்க போறீங்க என்பது முன்கூட்டியே உறுதியாக அவர்களுக்கு தெரிந்துவிட்டது என்று அர்த்தம்.

இதுவும் ஒருவகை இயலாமை தான். இதனால் தான் அவர்கள் தடை போடுகிறார்கள். அதையும் மீறி ம் ஜெயிச்சீட்டிங்கான உங்கள் வெற்றியை பார்த்து வயிற்றெரிச்சல் தான். இதய எரிச்சல் தான். வெந்து தணிந்தது காடு என்கிற அளவுக்கு இருக்கும். இதனால் கூட இருக்கும் நபர்களே உங்களை அவமானப்படுத்துவார்கள். எனவே வெற்றியை நோக்கி வலிமையாகவும், பிடிவாதமாகவும் இருங்கள்'' என்று பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+