சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை கண்காணிக்கும் குழு: ஐகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிப்பதற்கு நிர்வாகக் குழு அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜா் கோயில் கனகசபை மீது நின்று பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதியளித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிா்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது தீட்சிதா்கள் உள்ளிட்டோர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதேபோல், அரசாணைக்கு ஆதரவு தெரிவித்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

Chidambaram Natarajar Temple

சிதம்பரம் கோயிலின் நிா்வாகத்தை பொது தீட்சிதா்களிடம் ஒப்படைத்து, கடந்த 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு கோயில் முறையாக நிா்வகிக்கப்படவில்லை. கடந்த 12 ஆண்டுகளாக கோயில் வருமானம் தொடா்பான கணக்கு விவரங்களையும் தீட்சிதா்கள் குழு வெளிப்படைத்தன்மையுடன் சமா்ப்பிக்கவில்லை.

எனவே, சிதம்பரம் நடராஜா் கோயில் நிா்வாகத்தைக் கண்காணிக்க சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளான வி.பாரதிதாசனை தலைவராகவும், ஆா்.சுரேஷ்குமாரை துணைத் தலைவராகவும் கொண்ட நிா்வாகக் குழுவை அமைத்து உத்தரவிட்டனா். இந்தக் குழுவில், உறுப்பினராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான ராஜேந்தின், அலுவல் சாரா உறுப்பினா்களாக பொது தீட்சிதா்கள் சங்கத்தின் செயலா் மற்றும் இந்துசமய அறநிலையத் துறைச் செயலா் ஆகியோரை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

சிதம்பரம் நடராஜா் கோயிலின் கனகசபை மீது நின்று அனைத்து பக்தா்களும் தரிசனம் செய்யவும், தேவாரம், திருவாசகம் பாடவும் சம வாய்ப்பு வழங்குவதை, உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் நிறுவப்பட்டுள்ள நிா்வாகக் குழு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து பொது தீட்சிதர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அரசியலமைப்பின் 26-வது பிரிவின்படி கோயிலை நிர்வகிப்பதற்குத் தங்களுக்கு உரிமை இருப்பதாகவும், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு அந்த உரிமையில் தலையிடுவதாகவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிதம்பரம் கோயில் பொது தீட்சிதர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி அமர்வில் விசாரணைக்கு வந்தது. கோயிலை நிர்வகிக்க குழு தேவை என்ற கோரிக்கை உயர் நீதிமன்றம் முன் வைக்கப்படவில்லை. உயர் நீதிமன்றம் முன்பிருந்த பிரச்சனை கனகசபையில் வழிபாடு நடத்துவது தொடர்பாக மட்டுமே என்று தீட்சிதர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதத்தை முன் வைத்தனர்.

இதையடுத்து, கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபாடு செய்ய தீட்சிதர்கள் அனுமதிப்பதில்லை, பணம் வசூலிப்பதாக புகார்கள் உள்ளன, கோயில் நிர்வாகக் கணக்கை சரிவர காட்டுவதில்லை, கோயிலின் புராதன குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்படுவதில்லை என்று அரசு தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+