டிரம்பின் மாபெரும் தோல்வி.. அடுத்து என்ன? அமெரிக்க அரசியலில் வெடிக்க காத்திருக்கும் பிரச்சனைகள்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மாபெரும் தவறான கணக்கீடு, அவருடைய குடியரசு கட்சிக்கு வரலாற்று தோல்வியை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்டிருக்கும் இந்த தோல்வி.. சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. இதைவிட முக்கியம், இந்த தோல்விக்கு பிறகு என்ன நடக்கப்போகிறது என்பதுதான்.

இது குறித்து சிஎன்என் செய்தி ஊடகத்தில், ஸ்டீபன் கொலின்சன் என்பவர் பகுப்பாய்வு செய்து கட்டுரையை எழுதி இருக்கிறார். இந்த கட்டுரை, டிரம்பின் ஆதிக்கம் எப்படி தொடங்கியது? அது இப்போது எப்படி முடிவடைந்துள்ளது? என்பதை தெளிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது.

Donald Trump

யுகப்புரட்சி நாயகனா டிரம்ப்?

டிரம்பின் அரசியல் குழுவினர், நீண்ட காலமாக அவரை ஒரு யுக புரட்சி நாயகன் என்றும்.. அரசியல் சூப்பர் ஸ்டார் என்றும் கூறி வந்தனர். டிரம்ப், குடியரசு கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் மனநிலையை துல்லியமாக அறிந்த மாமனிதர் என்றும்.. சாதாரண குடியரசு கட்சியினரால் கற்பனை செய்ய முடியாத வெற்றிகளை பெற்றுத் தரும் அமானுஷ்ய சக்தி கொண்டவர் என்றும், புகழ்ந்து வந்தனர். அதில் ஓரளவுக்கு உண்மையும் இருந்தது. ஆனால், 2016 ஆம் ஆண்டு அவர் பெற்ற அதிரடி வெற்றிக்கு சரியாக 10 ஆண்டுகளுக்குப் பிறகு, நேற்று இரவு அந்த மாயாஜால சக்திகள் அனைத்தும் டிரம்பை விட்டு கழன்று கொண்டன. குடியரசு கட்சியின் தீவிர கோட்டைகளாக கருதப்பட்ட இடங்களில், இந்த தேர்தலில் பெரிய ஓட்டை விழுந்திருக்கிறது.

டிரம்பின் ஒட்டுமொத்த தவறான நிலைப்பாட்டையும்.. இந்த மாபெரும் வீழ்ச்சியையும், விவரிக்க டெக்ஸாஸ் மாநிலத்தை விட சிறந்த உதாரணம் எதுவும் இருக்க முடியாது. அங்கு ஜனநாயக கட்சியின் ஜேம்ஸ் டாலரிகோ கடந்த 38 ஆண்டுகளில் முதல்முறையாக செனட் சபைக்காக தேர்வாகியுள்ளார். மட்டுமல்லாது குடியரசு கட்சியின் அசைக்க முடியாத தூணாக கருதப்பட்ட ஆளுநர் கிரேக் அபோட், 4வது முறையாக போட்டியிட்ட நிலையில்.. ஜனநாயக கட்சியின் வழக்கறிஞர் ஜினா ஹினோஜோசாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார். இப்படி டிரம்ப் கால் வைத்த இடம் எல்லாம்.. கன்னி வெடி வைக்கப்பட்டு இருக்கிறது.

வெளியில் நிலவரம் இப்படி எனில்.. உள்ளுக்குள் நிலைமை அதைவிட மோசமாக இருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியான போது, அது குடியரசு கட்சிக்குள் பெரிய பூகம்பமாக வெடித்தது. டிரம்ப், தனது அதிகாரத்தை பயன்படுத்தி.. வலுக்கட்டாயமாக வேட்பாளராக நிறுத்திய பெரும்பாலான அவரது ஆதரவாளர்கள், கொடூரமான தோல்வியை சந்தித்தனர். இந்த தோல்வி, குடியரசு கட்சிக்குள் டிரம்புக்கு எதிரான நிலைப்பாட்டை அதிகரிக்க செய்திருக்கிறது.

மறுபுறம் டிரம்ப் நிர்வாகத்தின் மீதான ஊழல் புகார்கள், வெள்ளை மாளிகை நியமனங்களில் நிலவும் குழப்பங்கள் மற்றும் டிரம்பின் குடும்ப தனிப்பட்ட சொத்துக் குவிப்பு ஆகியவற்றை.. நாடாளுமன்ற குழுக்கள் மூலம் மிகத் தீவிரமாக விசாரிக்கும் சட்டப்பூர்வ அதிகாரம் தற்போது ஜனநாயக கட்சியினருக்கு கிடைத்திருக்கிறது.

அதே நேரம், தீவிர பழமைவாத கொள்கையுடைய நீதிபதிகளை நீதிமன்றங்களில் நியமிக்கும் திட்டத்தையும், உச்ச நீதிமன்றத்தில் ஏதேனும் காலியிடம் ஏற்பட்டால் அங்கு டிரம்ப் தனது ஆதரவாளர்களை நியமிப்பதையும் ஜனநாயக கட்சியினர்களால் முழுமையாக தடுத்து நிறுத்த முடியும்.

மொத்தத்தில் அதிபராக இருக்கும் டிரம்புக்கு வெளியுறவு கொள்கைகளில், அரசியலமைப்பு சட்டம் அதிகாரம் வழங்கியிருந்தாலும்.. ஈரானுடன் போர் செலவுகளுக்கான பட்ஜெட் மற்றும் அரசாங்க நிதி ஒதுக்கீடுகளில் நாடாளுமன்றத்திற்கும், ட்ரம்புக்கும் இடையே கடுமையான மோதல்கள் இருக்கும் என்று கட்டுரையாளர் கூறுகிறார். இந்த தோல்வி வெளியில் தெரிவதை விட.. அடுத்த சில நாட்களில் ஏற்படுத்த போகும் தாக்கம்தான் பெரியதாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+