வேலையை காட்டிய வடகிழக்கு பருவமழை! சென்னையில் இயல்பை விட 187% அதிகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில், பருவமழை இயல்பைவிட 187% அளவுக்கு பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டிற்கு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு என இரண்டு பருவமழைகள், பரவலான மழைப்பொழிவை கொடுக்கும். ஆனால், கடந்த ஜூலையில் தொடங்கி, செப்டம்பருடன் முடிவடைந்த தென்மேற்கு பருவமழை, கோவை, திருப்பூர், ஈரோடு என கொங்கு மாவட்டங்களுக்கு மட்டுமே நல்ல மழையை கொடுத்தது. மற்றபடி, சென்னை, மதுரை, ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு கொளுத்தியது.

tamil nadu rains chennai rain weather

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், டெல்டா தப்பித்தது. இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இது தென் மாவட்டங்களை விட வட மாவட்டங்களுக்கே அதிக அளவு மழைப்பொழிவை கொடுத்திருக்கிறது. கடந்த 1ம் தேதி தொடங்கி இன்றுவரை, இயல்பாக பெய்ய வேண்டியதை விட 70% அதிகமாகவே பெய்திருக்கிறது. அதிகபட்சமாக சென்னையில் 321.9 மி.மீ அளவுக்கு பெய்திருக்கிறது. இது இயல்பை விட 187% அதிகமாகும். மற்ற மாவட்டங்களை பொறுத்த அளவில்,

அரியலூர் 39%

செங்கல்பட்டு 94%

சென்னை 187%

கோயம்புத்தூர் 131%

கடலூர் 71%

தர்மபுரி 51%

திண்டுக்கல் 86%

ஈரோடு 68%

கள்ளக்குறிச்சி 44%

காஞ்சிபுரம் 42%

கன்னியாகுமரி -25%

காரைக்கால் 49%

கரூர் 127%

கிருஷ்ணகிரி 56%

மதுரை 85%

மயிலாடுதுறை 18%

நாகப்பட்டினம் -15%

நாமக்கல் 92%

நீலகிரி 39%

பெரம்பலூர் 43%

புதுச்சேரி 55%

புதுக்கோட்டை 171%

ராமநாதபுரம் 92%

ராணிப்பேட்டை 51%

சேலம் 60%

சிவகங்கை 147%

தென்காசி -63%

தஞ்சாவூர் 96%

தேனி -15%

திருநெல்வேலி -33%

திருப்பத்தூர் 154%

திருப்பூர் 141%

திருவள்ளூர் 160%

திருவண்ணாமலை 70%

திருவாரூர் 37%

தூத்துக்குடி -42%

திருச்சி 102%

வேலூர் 69%

விழுப்புரம் 89%

விருதுநகர் 28%

என மழை பதிவாகியுள்ளது. இதில் சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரிலும், அதையொட்டிய வட மாவட்டங்களிலும் அதிக அளவில் மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+