தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு "ஆரஞ்சு அலர்ட்.." கொட்டப்போகும் மழை! நெல்லை, குமரிக்கு மஞ்சள் அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும், 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையையும் சென்னை வானிலை மையம் கொடுத்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து வெப்பம் உயர்ந்து வருகிறது. வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வழக்கமாக மே மாத தொடக்கத்தில் தான் வெயில் அளவு அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டும் இயல்பை காட்டிலும் அதிகமாக வெயில் கொளுத்தி எடுக்கிறது.

எனினும், தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு சில இடங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. நேற்று தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மழை குறித்து மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. இதன்படி ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது.
மற்ற இடங்களில் வெயில் வாட்டி வதைத்தது. இன்று மட்டும் 15 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுத்துள்ளது. அதாவது அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோல் தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், மே 1ம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அடுத்த ஐந்து தினங்களில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். மே 2ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மே 3ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி












Click it and Unblock the Notifications