"ஆரஞ்சு அலர்ட்.." சென்னை மட்டுமல்ல.. தமிழகம் முழுக்க நள்ளிரவு வரை கொட்ட போகுது மழை.. பரபர அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்குச் சென்னை, திருவள்ளூர் உட்பட மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், இதனால் சென்னை உட்படப் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே நல்ல மழை பெய்து வருகிறது. மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை தொடர்ந்து வருகிறது.

Weather rain Chennai

இதனால் மாநிலத்தில் இருக்கும் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர் நிரம்பி வருகிறது. இதற்கிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆரஞ்சு அலர்ட்: திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 30-40 கிமீ வேகத்தில் தரைக்காற்றும் வீசக்கூடும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மழை கொட்டும்: மேலும் இரவு 10 மணி வரை நீலகிரி, கோவை, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சை, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கலாம் என்றும் இதனால் டிராபிக் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று ஆக.4ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நீலகிரி மாவட்டங்கள், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மழை இருக்கு: அதேபோல நாளை ஆக.5ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

ஆக.6 மற்றும் 7ம் தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆக.8ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆக. 9 மற்றும் 10ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று வானிலை மையம் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+