‛‛ஆரஞ்சு அலர்ட்’’.. தமிழகம் + புதுச்சேரியில் இன்று கொட்டப்போகும் கனமழை.. வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை என்பது இன்னும் தொடங்காத நிலையில் சென்னை, தென்காசி, திருநெல்வேலி, கோவை, தேனி உள்பட பல இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தான் விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தமிழகத்தில் தென்பட தொடங்கி உள்ளன. இன்னும் சில நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. அதன்படி கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள கனமழை பெய்யும் பட்சத்தில் ஒரே நாளில் 64.5 முதல் 115.5 மில்லி மீட்டர் வரை மழை பதிவாக வாய்ப்புள்ளது.
அதேவேளையில் மிக கனமழை என்றால் ஒரே நாளில் 115.5 மில்லி மீட்டர் முதல் 204.4 மில்லி மீட்டர் வரையிலான மழை பதிவாக வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள இந்த வேளையில் இன்று கேரளா மற்றும் தெற்கு உள்கர்நாடகா பகுதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications