சென்னை உட்பட 21 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு+மஞ்சள் அலர்ட்! வானிலை மையம் அறிவிப்பு
சென்னை: வடதமிழகங்களில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று காலை 10 மணி வரை சென்னை உட்பட 21 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சென்னையில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பதிவாகும். வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகினால் மழையின் தீவிரமும் அதிகமாக இருக்கும். அந்த வகையில் இந்த ஆண்டும் சென்னையில் இயல்பைவிட 2% அதிகமாக மழை பெய்திருக்கிறது. அக்.1ம் தேதி தொடங்கி நேற்று வரை சென்னையில் 504.3 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இந்த நாட்களில் 500 மி.மீ என்பது இயல்பான மழை அளவாகும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை கும்மிடிப்பூண்டியில் 6 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.

மற்ற மாவட்டங்களை பொறுத்தவரை, கோவையில் அதிக அளவு மழை பதிவாகியுள்ளது. அதாவது இன்று வரை 412.6 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இது இயல்பை விட 68% அதிகமாகும். தூத்துக்குடி, தென்காசி மற்றும் நாகை மாவட்டங்களில் முறையே இயல்பைவிட மைனஸ் 61%, மைனஸ் 49%, மைனஸ் 38% மழை குறைவாக பெய்திருக்கிறது.
இப்படி இருக்கையில் அடுத்த 3 மணி நேரத்தில், அதாவது காலை 10 மணி வரை சென்னை உட்பட 21 மாவட்டங்களில் கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நெல்லை, குமரிக்கு ஆரஞ்சு அலர்ட்டும், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சிராப்பள்ளி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடிக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டிருக்கிறது.
மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் விளக்கம்: 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும்.
ரெட் அலர்ட் விளக்கம்: மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது ரெட் அலர்ட் விடப்படும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால் போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று அர்த்தம். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications