இரவோடு இரவாக ஷாப்பிங் மார்க்கெட்டுகளில் குவிந்த மக்கள்.. ஒரே கூட்டம்.. சென்னையில் Panic Buying!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று இரவு முதல் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு உள்ள நிலையில், மக்கள் இப்போதே பொருட்களை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளனர். ஷாப்பிங் மால்களில், மார்க்கெட்டுகளில் இப்போதே பொருட்கள் காலியாக தொடங்கி உள்ளன.

அடுத்த 2-3 நாட்களுக்கு மக்கள் வெளியே போக முடியாத சூழல் ஏற்படலாம் என்பதால் இப்போதே பலரும் பொருட்களை அதிக அளவில் வாங்க தொடங்கி உள்ளனர்.

weather tamilnadu weatherman summer weather news

சென்னை வானிலை மையம் சார்பாக அடுத்த 3 நாட்களுக்கு பல்வேறு வானிலை அலர்ட்டுகள் கொடுக்கப்பட்டு உள்ளன. என்ன மாதிரியான அலர்ட் எந்த நாளுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது என்று இங்கே பார்க்கலாம்.

இன்று மஞ்சள் அலர்ட் தரப்பட்ட மாவட்டங்கள்: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

இன்று ஆரஞ்ச் அலர்ட் தரப்பட்ட மாவட்டங்கள்: விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம்

நாளை மஞ்சள் அலர்ட் தரப்பட்ட மாவட்டங்கள்: பெரம்பலூர், சேலம், தருமபுரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர் , அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகபட்டினம் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

weather tamilnadu weatherman summer weather news

நாளை ஆரஞ்ச் அலர்ட் தரப்பட்ட மாவட்டங்கள்: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

16ம் தேதி மஞ்சள் அலர்ட் தரப்பட்ட மாவட்டங்கள்: பெரம்பலூர், சேலம், தருமபுரி, , கிருஷ்ணகிரி, வேலூர் , அரியலூர், காரைக்கால் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

16ம் தேதி ஆரஞ்ச் அலர்ட் தரப்பட்ட மாவட்டங்கள்: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

weather tamilnadu weatherman summer weather news

பேனிக் பையிங்: இப்படிப்பட்ட நிலையில்தான் மக்கள் பேனிக் பையிங் தொடங்கி உள்ளனர். கொரோனா காலத்தில் இதேபோல் மக்கள் பேனிக் பையிங் செய்தனர். அதாவது பேனிக் பையிங் என்றால் மக்கள் ஏதாவது ஒரு இயற்கை பேரிடர் அல்லது நீண்ட விடுமுறைக்கு முன் பொருட்களை வாங்கி குவிப்பது ஆகும். கொரோனா காலத்தில் லாக்டவுனுக்கு முன் மக்கள் இப்படி கூட்டம் கூட்டமாக பொருட்களை வாங்கி குவித்தனர்.

அதன்படி சென்னையில் இன்று இரவு முதல் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு உள்ள நிலையில், மக்கள் இப்போதே பொருட்களை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளனர். ஷாப்பிங் மால்களில், மார்க்கெட்டுகளில் இப்போதே பொருட்கள் காலியாக தொடங்கி உள்ளன. முக்கியமாக காய்கறிகள், பிரெட்கள் இல்லாத அளவிற்கு மக்கள் வாங்கி குவித்து உள்ளனர். பில்லிங் கவுண்டர்களின் மக்கள் நீண்ட லைனில் நிற்கும் அளவிற்கு கூட்டம் நிலவியது.

weather tamilnadu weatherman summer weather news

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு வரும் 16ம் தேதி 'ரெட் அலர்ட்' கொடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். இதனால் சென்னையில் மிக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதால் 20 செ.மீ-க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது.

16ம் தேதி மட்டுமன்றி சென்னையில் 3 நாட்களில் 47 செ.மீ. மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதாவது சென்னையில் 3 நாட்களில் 470 மில்லி மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் பொதுவாக 24 மணி நேரத்தில் 20 செமீ மழை பெய்தால் வெள்ளம் ஏற்படும். இப்போது மூன்று நாட்களில் 47 செமீ வரை பெய்யும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் அடுத்த 2-3 நாட்களுக்கு மக்கள் வெளியே போக முடியாத சூழல் ஏற்படலாம் என்பதால் இப்போதே பலரும் பொருட்களை அதிக அளவில் வாங்க தொடங்கி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+