மளிகை கடைக்குள்ளே யாருன்னு பாத்தீங்களா? குபுகுபுவென திரண்ட சென்னை.. காய்கறி, பால் விலை திடீர் உயர்வு
சென்னை: சென்னையில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்ற அறிவிப்பு வெளியானதையடுத்து, நேற்றைய தினமும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைகளில் குவிந்தனர். அத்துடன், தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.
நேற்று முன்தினம் சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.. இதையடுத்து, சென்னையில் வாழும் மக்கள் வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்கள், பால், காய்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றை வாங்க கடைகளில் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.

அத்தியாவசிய பொருட்கள்: இதற்கு காரணம், கடந்த வருடம் பெய்த மழையின்போது மக்களின் அத்தியாவசியப் பொருட்களான குடிநீர், பால் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்காமல் அளவுக்கு அதிகமாக அவதியுற்றிருந்தனர். எனவே, இந்த முறை முன்கூட்டியே முக்கிய பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் முனைப்பு காட்டினார்கள். இதனால் நேற்று முன்தினம் அனைத்து அத்தியாவசிய கடைகளிலும் கூட்டம் நிரம்பியது.
ஒவ்வொருவரும் காய்கறிகளை கிலோ கணக்கில் வாங்கினார்கள்.. காய்கறிகள் மட்டுமல்லாமல், பழங்கள், பால் உள்ளிட்டவற்றை போன்றவற்றை வாங்கி சென்றதால், நேற்று முன்தினம் மாலையே பெரும்பாலான கடைகளில் பொருட்கள் விற்றுத் தீர்ந்தன.
காய்கறிகள்: இந்நிலையில், நேற்றைய தினமும் பொதுமக்கள், பால், காய்கறிகள், குடிநீர் கேன்களை வாங்கிவைத்து கொள்ள முயன்றனர்.. ஆனால், காய்கறிகள், பழங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டது.. நேற்று முன்தினம் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி, நேற்று கிலோ 100 ரூபாய் வரை எகிறியது.. வெங்காயமும் 90 ரூபாய்க்கு உயர்ந்தது.. ஏற்கனவே வெங்காயம், தக்காளி விலை உயர்ந்து காணப்பட்டு வந்த நிலையில், மழை காரணமாக வியாபாரிகள் அனைத்து காய்கறிகளின் விலையையும் உயர்த்திவிட்டனர்.
அதேபோல, சில இடங்களில் பால் தட்டுப்பாடு நிலவியதை காண முடிந்தது.. அரை லிட்டர், 35 முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது... மளிகை கடைகளிலும் கூட்ட நெரிசல் காணப்பட்டது.. குறிப்பாக மெழுகுவர்த்திகள் விலைகள் உயர்த்தி விற்கப்பட்டன..
தண்ணீர் கேன்: தண்ணீர் கேன் விலையும் உயர்த்தப்பட்டது.. 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கேன் குடிநீர், 50 ரூபாய் வரை உயர்ந்தது... நாளை முழுவதுமே கனமழை பெய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருப்பதால், ஆவின் பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய அனைவருக்கும் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் முன்வைத்துள்ளனர்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications