மக்கள் கவனமாக இருக்கனும்! தாமிரபரணி ஆற்றில் மீண்டும் உபரி நீர் திறப்பு.. நெல்லை ஆட்சியர் எச்சரிக்கை
நெல்லை: மணிமுத்தாறு அணையில் இருந்து உபரி நீர் 1500 முதல் 2000 கன அடி வரை தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17-ந்தேதி முதல் 3 நாட்கள் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அணைகள் வேகமாக நிரம்பியது. உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டதால் தாமிரபரணியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வினாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கும் அதிகமான தண்ணீர் சென்றதால், கரையோர கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்தது. குடியிருப்புகள், விளைநிலங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய வெள்ளத்தில் செல்போன் கோபுரங்களின் அடியில் உள்ள ஜெனரேட்டர்களும் மூழ்கியது.

இதனால் தொலைத்தொடர்பு வசதியும் துண்டிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் கருங்குளம், ஆதிச்சநல்லூர், பொன்னன்குறிச்சி, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, முக்காணி, ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர், அகரம், பால்குளம், குரும்பூர், சோனகன்விளை, அம்மன்புரம் 100க்கும் அதிகமான கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
திருச்செந்தூர்-திருநெல்வேலி சாலை பல இடங்களில் பலத்த சேதமடைந்துள்ளது. சில மீட்டர் தூரம் வரை சாலை இருந்த தடமே இல்லாமல் வெள்ளம் அடித்துச் சென்றிருக்கிறது. . தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர், ஸ்ரீவைகுண்டம் தடுப்பணைகளை மூழ்கடித்து செல்லும் தண்ணீரானது ஏரல், முக்காணி வழியாக புன்னக்காயல் கடலில் கலக்கிறது. மழை விட்டு ஒருவாரம் ஆகியும் தூத்துக்குடி மாவட்டத்தின் பல இடங்களில் இயல்பு நிலை திரும்பவில்லை.
இந்த நிலையில், தாமிரபரணி ஆற்றங்கரையோரம் பொதுமக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் கூறியிருப்பதாவது:-
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணை முழு கொள்ளளவான 118 அடியை இன்று மாலை 4 மணி அளவில் எட்டும்.அதன் பிறகு உபரி நீர் 1500 முதல் 2000 கன அடி வரை தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படும்.நேற்று முதல் மழை ஏதுமில்லை. வெள்ள அபாயம் எதுவும் தற்போது இல்லை. ஆயினும் பொதுமக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications