சுற்றிலும் வெள்ளம்.. துடித்த கர்ப்பிணி பெண்கள்.. பல நூறு பேரை காப்பாற்றிய சென்னை போலீஸின் DDRT டீம்!
சென்னை: சென்னையில் வெளுத்தெடுத்த மழை காரணமாக நகரையே வெள்ளம் சூழ்ந்த நிலையில், சென்னை மாநகர காவல்துறையின் DDRT பேரிடர் மீட்புக் குழுவினர், அதிரடியாக களமிறங்கி, ஏராளமானோரை மீட்டுள்ளனர். நிறைமாத கர்ப்பிணி, மின்சாரம் தாக்கிய நபர்கள் என ஏராளமானோரை அவர்கள் மீட்டுள்ளனர்.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள 'மிக்ஜாம்' புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வந்த வரலாறு காணாத மழையின் காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. தமிழக அரசு பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டது.

எனினும், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை சுமார் 45 செ.மீ மழை கொட்டித் தீர்த்ததால், சென்னை நகரமே தத்தளித்தது. சென்னை மாநகராட்சி ஊழியர்கள், நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். மழைநீர் அதிகம் தேங்கிய பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக, நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர். சென்னை பெருநகர காவல் மாவட்ட பேரிடர் மீட்புக் குழு (DDRT), வெள்ள மீட்புப் பணிகளில் வேகமாகப் பணியாற்றியது.

சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க சென்னை பெருநகர காவல் மாவட்ட பேரிடர் மீட்புக் குழுவின் (DDRTs) முக்கிய நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
1. நேற்று காலை (04.12.2023), கிண்டி, 5 பர்லாங் சாலையில் அமைந்துள்ள LPG நிலையத்தின் தற்காலிக ஜெனரேட்டர் அறை, அருகில் உள்ள கட்டுமான நிறுவனத்தின் பள்ளத்தில் விழுந்தது. மேற்படி நிலையத்தின் மூன்று ஊழியர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருடன், தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

2. நேற்று பிற்பகல் 3 மணிக்கு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்கள், M.G.சாலை அடையாரில் அமைந்துள்ள மழைநீர் தேங்கிய அவர்களது வீட்டிலிருந்து மீட்கப்பட்டனர்.
3. N-3 முத்தியால்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட BRN கார்டன் பகுதியிலிருந்து 54 குடும்பங்கள் மீட்கப்பட்டனர்.

4. R-5 விருகம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலிகிராம் தசரதபுரம் 4வது தெருவில், புதிதாக பிரசவித்த தாய் மற்றும் குழந்தை மீட்கப்பட்டனர்.
5. கோயம்பேடு பகுதியில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு வயது குழந்தை மீட்கப்பட்டனர்.
6. E-1 மயிலாப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாந்தோம் பகுதியில் உள்ள கணேசபுரம், ஸ்லேட்டர்புரம் & சண்முகா தெருவில் 225 நபர்கள் மீட்கப்பட்டனர்.
7. S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அன்பு நகரில் 15 நபர்கள் மீட்கப்பட்டனர்.

8. 6 நபர்கள் (2 முதியவர்கள், 2 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள்) மேற்கு மாம்பலம் ஶ்ரீனிவாச ஐயர் தெருவில் உள்ள மழைநீர் தேங்கிய அவர்களது இல்லத்திலிருந்து மீட்கப்பட்டனர்.
9. S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய எல்லையைச் சேர்ந்த ராம் நகரிலிருந்து ஒரு பெண் உட்பட 8 நபர்கள் மீட்கப்பட்டு மயிலை பாலாஜி நகர் நிவாரண மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
10. S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய எல்லையைச் சேர்ந்த அண்ணா நகரிலிருந்து 4 நபர்கள் மீட்கப்பட்டனர்.
11. மெரினா கால்வாய் தெருவிலிருந்து 8 நபர்கள் மீட்கப்பட்டு, V.R.பிள்ளை தெருவில் உள்ள (D-6 அண்ணா சதுக்கம் கா.நி) சமுதாய நலக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
12. J-4 கோட்டூர்புரம் காவல் நிலைய எல்லை அன்னை சத்யா நகரிலிருந்து 250 நபர்கள் மீட்கப்பட்டு, செயின்ட் சேவியர் பள்ளிக்கூட நிவராண முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
13. ஈச்சங்காடு சந்திப்பில் கனமழையில் சிக்கிக்கொண்ட மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்தில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட 22 பயணிகள் மீட்கப்பட்டு, கீழ்க்கட்டளையில் உள்ள பல்லாவரம் நடுநிலைப் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர்.
14. 57 மரங்கள் அகற்றப்பட்டது நீங்கலாக, ராஜா அண்ணாமலை மன்றம் அருகில் விழுந்த ஒரு மரம் மாவட்ட பேரிடர் மீட்புக்குழுவினரால் மற்ற துறைகளுடன் இணைந்து அகற்றப்பட்டது.
நீரில் மூழ்குதல் / மின்சாரம் தாக்குதல் மற்றும் மருத்துவ உதவிகள் விபரம்:
1. H-6 ஆர்.கே.நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொருக்குப்பேட்டை, காரனேஷன் நகரில், மரம் விழுந்து காயமடைந்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் ரமேஷ், வ/43, த/பெ.பெருமாள் என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதால், அவரை மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
2. திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த முருகன் (37 வயது) என்பவர் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
3. B-2 எஸ்பிளனேடு காவல் நிலைய எல்லையைச் சேர்ந்த 72 வயது பெண்மணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
4. பிரசவ வலியிலிருந்த கொளத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் மீட்கப்பட்டு, அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
5. நான்கு கர்ப்பிணிப் பெண்கள் புளியந்தோப்பு ஆரம்ப சுகாதார மையத்திலிருந்து மீட்கப்பட்டு, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
6. பிரசவ வலியிலிருந்த கர்ப்பிணிப் பெண் அயனாவரத்திலிருந்து மீட்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
7. G-1 வேப்பேரி போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவசங்கரன் மற்றும் காவலர் 60683 ராஜசேகர் ஆகியோர் EVK சம்பத் சாலை-EVR சாலை சந்திப்பில் பணியிலிருந்தபோது, மின்சாரம் தாக்கியதில், மேற்படி காவலர் ராஜசேகர் மயங்கி விழுந்தார். உடனடியாக, இவர்கள் இருவரும் கீழ்ப்பாக்கம் அப்பலோ பர்ஸ்மெட் மருத்துவமனைக்கு சிசிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
8. R-6 குமரன் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எல்லையம்மன் கோவில் தெருவில், படுக்கையில் இருந்த புற்று நோயாளி மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
9. கட்டுமானப் பணி ஊழியரான ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மதுனுமுர்மு என்பவர், கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பு அருகே சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கியது. உடனடியாக, இவர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
10. கொடுங்கையூரைச் சேர்ந்த மாநகராட்சி ஊழியர் ரமேஷ் என்பவர் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை வழியே பணிக்கு வந்துகொண்டிருந்தபோது, அவர் மீது ஒரு மரம் விழுந்ததில், தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. இவர் மீட்கப்பட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
11 பிராட்வே BRN கார்டன் பகுதியைச் சேர்ந்த ஆனந்தபாபு (35 வயது) என்பவர் மீது பிரகாசம் சாலை & சாலை விநாயகர் கோவில் சந்திப்பு அருகே, மரத்தின் கிளை ஒன்று விழுந்ததில், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இவர் மீட்கப்பட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications