Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குளுகுளு "ஊட்டி"யையும் விட்டு வைக்காத வெயில்.. சுற்றுலாப் பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த வெப்பநிலை

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளின் சொர்க்கபூமியாக விளங்கும் ஊட்டியிலும் இந்த ஆண்டு வெப்ப நிலை இயல்பை விட அதிகமாக பதிவாகியுள்ளது. ஏற்கனவே கோடை வெயிலில் இருந்து ரிலாக்ஸ் ஆக சுற்றுலாப் பயணிகள் ஊட்டி செல்ல இருந்த நிலையில் அவர்களுக்கு இது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. வழக்கமாக மே மாதத்தில் தான் வெயில் அளவு அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்குவதற்கு முன்பே வெயில் அளவு உச்சத்தை எட்டி விட்டது. குறிப்பாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. தினமும் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வருகிறது.

Popular tourist hotspot Ooty records 4 degrees Celsius above normal

நேற்று முன்தினம் ஈரோட்டில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக 107 டிகிரி வெப்பநிலை பதிவானது.
நேற்று சேலத்தில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதுவும் இந்தியாவிலேயே 3 வது அதிகமாக பதிவான வெப்பநிலையாகும். இவ்வாறு வெயில் வாட்டி வதைப்பதால் வெப்பத்தில் இருந்து தப்பிக்க குளிர்ச்சியான மாவட்டங்கள், குளிர்ச்சியான பகுதிகளுக்கு செல்ல மக்கள் பிளான் போட்டு வருகின்றனர்.

தற்போது பள்ளிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டுள்ளதால் குழந்தைகளோடு சுற்றுலா செல்ல பெரும்பாலானோர் திட்டமிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த கோடை வெயிலில் இருந்து தப்பிக்க அனைவரின் தேர்வாகவும் இருப்பது ஊட்டி, கொடைக்கானல் தான். கொதிக்கும் வெப்பத்தில் இருந்து சற்று இளைப்பாறுவதற்கு சுற்றுலாப் பயணிகளின் சிறந்த தேர்வு இதுவாகவே இருக்கிறது.

இதனால் பலரும் ஊட்டி, கொடைக்காணலுக்கு படையடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கொளுத்தும் வெயில் ஊட்டியையும் விட்டு வைக்கவில்லை. ஊட்டியிலும் 4 முதல் 5 டிகிரி வரை வெப்பநிலை உயர்ந்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை மையம் கூறுகையில், நேற்று மலைப்பகுதியான ஊட்டியில் 27.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளை விட இது மிக குறைவு என்றாலும், ஊட்டியில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது வெயில் அதிகரித்துள்ளது. அதாவது இயல்பாக இங்கு இருக்கும் வெப்பநிலையை காட்டிலும் தற்போது 4 முதல் 5 டிகிரி வரை உயர்ந்துள்ளது. இதேபோல் கொடைக்கானலிலும் அதிகபட்ச வெப்பநிலையாக 2 டிகிரி செல்சியஸ் அதிகரித்து 23.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

Popular tourist hotspot Ooty records 4 degrees Celsius above normal

மேலும் வானிலை மையம் கூறுகையில், தமிழகத்தின் வட மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வானிலை நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாக சேலத்தில் 42.3 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 4.4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.

வட மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்தாலும், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தினமும் மாலை நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் கொஞ்சம் குளிர்ந்து காணப்படுகிறது. இதேபோல் கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் லேசான மழை பெய்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+