Marina: கொந்தளிக்கும் ராட்சத அலைகள்! இரவெல்லாம் சப்தம்! மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை!
சென்னை: மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தடுப்புகளை அமைத்து போலீஸார் கண்காணித்து வருகிறார்கள். டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 250 கி.மீ. தொலைவில் இருந்து வரும் நிலையில் காற்றானது சுழன்று சுழன்று அடிக்கிறது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள வேதாரண்யத்திற்கு கிழக்கே 100 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 80 கி.மீ. தொலைவிலும் புதுவைக்கு தென்கிழக்கே 150 கி.மீ. தூரத்திலும் சென்னைக்கு தெற்கே 280 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது.

கடந்த 6 மணிநேரத்தில் மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயல் நகரும்போது வடதமிழகம், புதுவை கடலோரப் பகுதிகளில் இருந்து 50 கி.மீ. தொலைவில் இன்று காலையிலும், 25 கி.மீ. தொலைவில் மாலையிலும் நிலவக் கூடும். சென்னை கடலோர பகுதிகளுக்கு அருகே இன்று மாலை வரும் என கணிக்கப்பட்டுள்ளது.
டிட்வா புயலால் சென்னையில் நேற்று மதியம் முதலே மழையானது விட்டுவிட்டு பெய்து வருகிறது. புயல் சற்று தொலைவில் இருப்பதாலும் வறண்ட காற்று நிலவுவதாலும் சென்னைக்கு அதிக அளவில் மழை பெய்யவில்லை.
ஆனால் டிட்வா புயலானது இன்று மாலை தமிழக கடற்கரையை 25 கி.மீ. தூரம் வரை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளதால் மாலை முதல் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முதலே கடற்கரைகள் சீற்றத்துடன் காணப்பட்டன. பாம்பன், வேதாரண்யம், நாகை, புதுவை, காரைக்கால், கடலூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடற்கரைகள் சீற்றத்துடன் காணப்பட்டன.
அந்த வகையில் சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், நீலாங்கரை, காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் கடல் அலையானது அதிகரித்துள்ளது. கடலும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இரவு நேரங்களில் அதிக சப்தங்களுடன் ஒலி எழுந்தது.
மேலும் மெரினாவில் தற்போது பலத்த காற்று வீசி வருவதால் கடற்கரை மணல், சாலையில் பறந்து குவிந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். அது போல் நேற்று முதலே கடற்கரைகளுக்குச் சென்று புயல் காற்று எப்படி இருக்கிறது என்பதை பார்க்க சென்றனர்.
அவர்களை போலீஸார் எச்சரித்து அனுப்பியிருந்தனர். அது போல் கடலில் இறங்கி விளையாடிய இளைஞர்கள் குறித்தும் மீனவர்கள் காவல் துறைக்கு புகார் அளித்தனர். அதன் பேரில் போலீஸார் அங்கு வந்து அவர்களை வெளியேற்றினர்.
இந்த நிலையில் இன்று சென்னைக்கு மிக அருகில் டிட்வா புயல் வருவதால் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் உள்ளே சென்றுவிடக் கூடாது என்பதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் மெரினாவுக்கு வருவதற்கான மாற்று பாதைகள் வழியாக பொதுமக்கள் வந்தவண்ணம் உள்ளார்கள். சில இளைஞர்கள் ஆபத்தை உணராமல் கடல் அலைகளில் குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications