அடுத்த 3 மணி நேரம்.. 3 மாவட்ட மக்களும் குடையை கையில் வைத்து கொள்ளுங்கள்.. வானிலை ஆய்வு மையம் அலர்ட்!
சென்னை: கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை காலத்தில் வெயில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, வழக்கத்திற்கு மாறாக மழை பெய்து வருகிறது. ஏற்கனவே அடுத்த 10 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், இன்று காலை 3 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சி வடக்குப் பகுதியில் இணையும் வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், அந்தமான் பகுதியில் புதிய காற்று சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் தரப்பில், அரபிக் கடலோரம் நிலை கொண்டு இருந்த காற்று சுழற்சி மகாராஷ்டிரா கரைக்கு நெருங்கி கடலோடு இணைந்த சுழற்சியாக தற்போது நீடித்துக் கொண்டு இருக்கிறது.

அதாவது, காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்று சுழற்சி இன்னும் தற்போது இன்னும் முழுமையாக உள்ளே நுழையாமல், ஆந்திரக் கரையோரம் நீடித்துக் கொண்டு இருக்கிறது. அது அரபிக் கடல் நோக்கி நகரத் தொடங்கியது. இது விலகும் நேரத்தில் இன்று அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சி உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இது பரவலாக மழை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு பருவக் காற்று தொடங்கும் என்பதால், 26ம் தேதி முதல் கனமழை பெய்யும். காலை 10 மணிக்கு பிறகு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சாரல் மழையாக பெய்யும். இது கெடைக்கானல் வரை பெய்யும். மதியத்துக்குள் தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் ஆங்காங்கே மழை பெய்யும். டெல்டாவிலும் சென்னையிலும் நள்ளிரவில் மழை பெய்யும். 24ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நீலகிரி, வால்பாறை பகுதிகளில் ரெட் அலர்ட் விடுகின்ற அளவுக்கு கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரங்களில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கணிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் காலை நேரங்களில் வெளியில் செல்வோர் மழைக்கு ஏற்ப திட்டமிட்டுக் கொள்வது சரியாக இருக்கும் என்றும் பார்க்கப்படுகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications