இன்று 10 மணிக்குள் 17 மாவட்டங்களில் மழை வெளுக்கப்போகுது.. லிஸ்ட்டில் சென்னையும் இருக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிக்குள் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

கோவை, மதுரை, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai Weather rain

சென்னை மழை

சென்னை மற்றும் புறநகரில் மேக வெடிப்பால் பல்வேறு இடங்களில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. வடபழனி, கிண்டி, ஆலந்தூர், கோடம்பாக்கம், போரூர், வளசரவாக்கம், ராமாபுரம், மயிலாப்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பொழிந்தது. அண்ணா நகர், வில்லிவாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கியது.

சென்னை மீனம்பாக்கம், வண்டலூர், தாம்பரம், சேலையூர் பகுதிகளிலும் கனமழை கொட்டியது. வட சென்னை பகுதிகளான ராயபுரம், வண்ணரப்பேட்டை, தண்டையார்பேட்டையில் கனமழை வெளுத்து வாங்கியது. வியாசர்பாடி பகுதியில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

கொட்டிய கனமழை

சென்னையின் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இரவு 10 மணிக்கு பிறகு பெய்த மழை, 2 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் பெய்தது. கோயம்பேடு, திருமங்கலம், பாடி, அம்பத்தூர், மண்ணூர்பேட்டை, அத்திப்பட்டு, அயப்பாக்கம், ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.

கனமழையால் ஆவடி சுற்றுவட்டாரத்தில் சாலைகளில் ஆறு போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்பகுதி சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். மழைநீர் வடிகாலில் இருந்து கழிவுநீர் வெளியேறியதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

மேகவெடிப்பு

சென்னையில் நேற்று இரவு பல பகுதிகளில் ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ மழை பெய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு மணி நேரத்தில் 10 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பொழிவது மேகவெடிப்பு எனப்படுகிறது. சென்னையில் நேற்று இரவு 11 மணியளவில் மேகவெடிப்பு ஏற்பட்டு, மழை கொட்டித் தீர்த்துள்ளது.

இந்நிலையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிக்குள் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று 10 மணி வரை மழை

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. கோவை, மதுரை, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+