இரவு முழுக்க விடாமல் வெளுக்க போகும் மழை.. சென்னை முதல் குமரி வரைக்கும் 18 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: தமிழகத்தில் நள்ளிரவு 1 மணி வரை 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்படு, விழுப்புரம், திருவண்ணாமலை, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, நீலகி உள்பட 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் தொடர்ர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதேபோல் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது.

இன்றும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. நெல்லை, தென்காசியில் இன்று காலையில் இருந்து இரவு வரை விட்டு விட்டு தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இடையிடையே கனமழையும் வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று இரவு முழுக்க மழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதாவது நள்ளிரவு ஒரு மணி வரை தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், குமரி உள்பட 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
நள்ளிரவு 1 மணி வரை நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, அரியலூர், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications