அடுத்த ஒரு மணி நேரத்தில் ... 3 மாவட்டங்களில் கொட்ட போகுது கனமழை.. வானிலை மையம் அறிவிப்பு
சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதாவது தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
அக்னி வெயில் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயில் கொளுத்தி வருகிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் உண்மையில் பெரிய சிக்கலை சந்தித்து வருகிறார்கள். சென்னையில் எல்லாம் இருசக்கர வாகனத்தில் தண்ணீர் அருந்தாமல் சென்றால், நிச்சயம் மயக்கமே வந்துவிடும். கால்களை சைலன்சர்களை விடவும் சுட்டுவிடும் அளவிற்கு வெயில் இருக்கிறது.

இந்த சூழலில் இன்று முதல் ஏப்.26 வரை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும். அதோடு அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக கர்ப்பிணிகள், வயதானவர்கள், குழந்தைகள் வெயிலில் வெளியில் செல்வதை அடியோடு தவிர்ப்பது நல்லது.
கடும் வெயில் இருந்தாலும் மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது, தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது என்றும், இதனால் இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என்றும் சென்னைவானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதாவது தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சொன்னபடியே திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications