ராத்திரி 10 மணிக்குள் 32 மாவட்டங்களில் மழை பிச்சு உதறப்போகுது.. வானிலை மையம் விடுத்த அலர்ட் மெசேஜ்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணிக்குள் 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த்ள்ளது. பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அதற்கேற்ப தயாராகிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, கரூர், நீலகிரி, தேனி, கோவை, திருப்பூர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 32 மாவட்டங்களில் இரவு 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று மழை
கோடை வெய்யில் கொளுத்தி வந்த நிலையில், இன்று பிற்பகலில் மதுரையில் பரவலாக மழை பெய்தது. செல்லூர், ஆனையூர், கலைநகர், வள்ளுவர் காலனி, தபால் தந்தி நகர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் இன்று பரவலாக பலத்த மழை பெய்துள்ளது. மதுரையில் பெய்த கோடை மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்துள்ளது. ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பட்டியில் ஆலங்கட்டி மழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் மிதமான மழை பதிவாகியிருக்கிறது. ஆலங்குடி, வடகாடு, கொத்தமங்கலம், கறம்பக்குடியில் இன்று பிற்பகலில் மிதமான மழை பெய்தது.
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரமாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ததால் கோடை வெப்பம் தணிந்துள்ளது.
இன்று இரவு 10 மணிக்குள்
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, கரூர், நீலகிரி, தேனி, கோவை, திருப்பூர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 32 மாவட்டங்களில் இரவு 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நாளையும் மழை
அதேபோல் நாளை (மே 17) தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications