பெங்களூரில் இந்த வாரம் முழுக்க வெளுக்க போகுது மழை.. இந்திய வானிலை ஆய்வு மையம் வார்னிங்
பெங்களூர்: பெங்களூரில் இன்று காலையில் திடீர் கனமழை பெய்தது. இதனால் பெங்களூர் நகரில் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த வாரம் இறுதி வரை பெங்களூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழையால் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களும் நல்ல மழைப்பொழிவை பெற்று வருகின்றன. குறிப்பாக இன்று காலை கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூரில் கனமழை கொட்டி தீர்த்தது.

பெங்களூரில் கனமழை: இதனால், அங்கு வெளிவட்ட சாலை மற்றும் நகரின் சில பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. டெக் சிட்டி பகுதியில் உள்ள முக்கிய சாலைகளிலும் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.. மழை நீர் தேங்கியதில் கடுமையான டிராபிக் நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து சென்றன. சும்மாவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நிலையில், மழையும் பெய்து தண்ணீர் தேங்கியதால் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசல்: இன்று பெய்த மழைக்கே பெங்களூரில் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், இந்த வாரம் இறுதி வரை பெங்களூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- வரும் வியாழக்கிழைமை வரை பெங்களூரில் மிதமான மழை பெய்யும். வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஒரு வாரத்திற்கு மழை: பெங்களூரில் இன்று வெப்ப நிலையை பொறுத்தவரை 26 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். பெங்களூரில் இன்று ஆங்காங்கே ஒரு சில இடங்களில் கனமழை / இடியுடன் கூடிய மழை பெய்யும். ராமனகரா, சாம்ராஜ்நகர் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை வானிலை எப்படி?: நளையை வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரை ராமநகரா, சாம்ராஜ்நகர், பெங்களூர் நகரம், பெங்களூர் புறநகர், கோளார், சிக்கபல்லபுரா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் அல்லது இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மைசூர், மாண்டியா, ஹசன், தும்கூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது.
கர்நாடக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. தெற்கு உள் கர்நாடக பகுதிகளில் உள்ள இதர பகுதிகளில் மிதமான மழையும், இதர பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications