அடுத்த வாரம் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. அப்டேட் கொடுத்த சென்னை வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் வெப்பநிலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அடுத்த வாரம் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், "கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஈரோடு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை.

தமிழகம், புதுவையில் சில இடங்களில் வானிலை பொதுவாக இயல்பை ஒட்டியும் நிலவியது. மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு செல்சியஸ் அதிகமாகவும், ஏனைய இடங்களில் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 32- 36° செல்சியஸ் மற்றும் தமிழக கடலோரப்பகுதிகளில் பதிவாகியுள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 30-35° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். பிப்.23 முதல் பிப்.26 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
பிப்.27ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (22-02-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" என சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications