வடகிழக்கு பருவமழையில் இதுதான் முதல் நிகழ்வு.. 16-ம் தேதி வரை தாக்கம் இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை: கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வடகிழக்கு பருவமழை தொடங்கி முதல் காற்றழுத்த பகுதி இது தான் என்றும் இதன் தாக்கம் 16 ஆம் தேதி காலை வரை இருக்கும் என்று கூறினார்.
தமிழ்நாடு மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 21-ம் தேதி தொடங்கியது. வழக்கத்தை விட சற்று தாமதமாகவே வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கினாலும் தொடக்கத்தில் பெரிய அளவில் மழை எதுவும் பெய்யாமல் போக்கு காட்டி வந்தது. இதனால், பருவமழை எப்போது சூடுபிடிக்கும் என மக்கள் எதிர்பார்க்க தொடங்கினர். இந்த நிலையில், நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே பரவலாக மழை பெய்ய ஆரம்பித்தது.

வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சிகளால் தமிழ்நாடு முழுவதும் நவம்பர் மாதம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது, பருவமழை தீவிரம் அடைந்து இருப்பதால் மழை பல இடங்களிலும் வெளுத்து வாங்கி வருகிறது. தற்போது, வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும். முன்னதாக தமிழ்நாடு வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 16 ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழைக்கு வாய்ப்பு: விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் வருகிற 16 மற்றும் 17-ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
16 ஆம் தேதி காலை வரை: இந்த நிலையில், தமிழகத்தில் மழை எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியதாவது:- தென்மேற்கு வங்க கடலில் டெல்டா பகுதியில் மேலடுக்கு சுழற்சியின் தாக்கம் காரணமாக கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருவதை பார்க்கிறோம். வடகிழக்கு பருவமழை தொடங்கி முதல் காற்றழுத்த பகுதி போல இதை கடலோர மாவட்டங்களுக்கு எடுத்துக்கொள்ளலாம். 16 ஆம் தேதி காலை வரை இதன் தாக்கம் இருக்கும். அதன்பிறகு மேலடுக்கு சுழற்சி இழுத்துக் கொண்டு மேலே சென்றுவிடும். எனவே தாக்கம் 15 ஆம் தேதி மாலை வரைக்குமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications