தமிழகத்தில் மீண்டும் மழை.. நாளை முதல் 28-ம் தேதி வரை வருது.. ஊட்டி செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு
சென்னை: குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 24, 25-ம் தேதிகளில் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26, 27-ம் தேதிகளில் டெல்டா, தென் தமிழக கடலோர மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளிலும் 28-ம் தேதி தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடுங்குளிர் நிலவுகிறது. அதிகாலை வேளையில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. வழக்கமாக டந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும்.. அதன்படியே மழை பெய்தது. தமிழகம் முழுவதும் அக்டோபரில் வடகிழக்கு பருவமழையால் நல்ல மழை கிடைத்தது. எனினும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் அளவிற்கு மழை இல்லை..

அதேநேரம் டிசம்பரில் டிட்வா புயலால் வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. அதன்பிறகு பெரிய அளவில் மழை இல்லை. அதன்பிறகு குளிர் அதிகமாக தொடங்கியது. கடந்த சில வாரங்களாகவே தமிழகம் முழுவதும் கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் குளிர் நிலவி வருகிறது. சென்னை சுற்றுவட்டாரங்களில் கூட காலை மற்றும் மாலை, இரவு நேரங்களில் கடுமையான குளிர் காணப்படுகிறது. இதனிடையே கடும் குளிர் ஒருபுறம் எனில் மீண்டும் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 24, 25-ம் தேதிகளில் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
26, 27-ம் தேதிகளில் டெல்டா, தென் தமிழக கடலோர மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளிலும் 28-ம் தேதி தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர பகுதிகளில் இன்று முதல் வறண்ட வானிலை நிலவும். அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 26-ம் தேதி வரை குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக் கூடும். நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு அல்லது அதிகாலை உறைபனி ஏற்பட வாய்ப்பு உள்ளது. நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குறைந்தபட்சமாக ஊட்டி, குன்னூரில் 7 டிகிரி செல்சியஸ்யஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது" இவ்வாறு வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications