முடிவுக்கு வந்த மழை.. இனி தமிழகத்தில் கோடை வெயில் படுத்தியெடுக்க போகுது! வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாகக் கடந்த இரண்டு நாட்களாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்ததால் மாநிலத்தின் வெப்பநிலை கணிசமாகக் குறைந்துள்ளது. இதற்கிடையே வரும் நாட்களில் மழை தொடருமா.. இல்லை வெப்பம் அதிகரிக்குமா என்பது குறித்து வானிலை மையம் என்ன சொல்கிறது என்பதை நாம் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. மாநிலத்தில் உள்ள பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்தது.

அதிகரிக்கும் வெப்பம்
கடந்த சில நாட்களாகவே மாநிலத்தில் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், அந்த வெப்பத்தைக் குறைக்கும் வகையில் இந்த மழை இருந்தது. மழையால் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் கணிசமாகக் குறைந்திருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையானது தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் சற்று குறைந்துள்ளது.
சென்னை வானிலை மையம்
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இன்று (மார்ச் 13) முதல் மார்ச் 15 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் மார்ச் 16ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் மார்ச் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்றார்.
அதாவது கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் பெய்து வந்த மழை நேற்றுடன் முடிவுக்கு வந்துவிட்டது. இன்று முதல் மார்ச் 16 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் உயரக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பமானது வரும் மார்ச் 15 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை விட 2-3° அதிகமாக இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை கிளைமேட் என்ன
வானிலை மையம் மேலும், "சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன
இன்று அரபிக்கடல் பகுதிகளின் லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
நைட் முழுக்க கொட்ட போகுது மழை.. சென்னை உட்பட 26 மாவட்டங்களில் குளுகுளு கிளைமேட்! வானிலை மையம் அலர்ட் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
அடுத்த 3 மணி நேரம்.. விடாமல் கொட்டப் போகுது மழை.. செங்கல்பட்டு உள்பட 16 மாவட்டங்களுக்கு அலர்ட்! -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்!












Click it and Unblock the Notifications