3 மணிநேரத்தில் 36 செமீ மழை! இது மேக வெடிப்பு இல்லை! அதுக்கும் மேல.. ராமேஸ்வரம் பற்றி வெதர்மேன் பதிவு
சென்னை: ராமேஸ்வரத்தில் 3 மணிநேரத்தில் 36 சென்டிமீட்டர் மழை வெளுத்து வாங்கி உள்ள நிலையில் இவ்வளவு தீவிரமான மழையை பார்த்ததே இல்லை. இதை மேக வெடிப்பு என்று கூறாமல் சூப்பர் மேக வெடிப்பு என்று சொல்லலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மதியம் முதல் மாலை வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

பாம்பன், ராமேஸ்வரம் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. அதன்படி பாம்பனில் இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை 19 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் ‛‛பாம்பனில் மிகக் குறுகிய இடத்தில் உருவான வலுவான மேகக்கூட்டங்கள் காரணமாக மேகவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனால் கனமழை வெளுத்து வாங்கி உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக இன்று ராமேஸ்வரத்தில் கனமழை பதிவாகி உள்ளது.
ராமேஸ்வரத்தில் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரையிலான 10 மணி நேரத்தில் ராமேஸ்வரத்தில் மொத்தம் 41 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. மதியம் 1 மணி முதல் 4 மணி வரை மொத்தம் 4 மணிநேரத்தில் ராமேஸ்வரத்தில் மட்டும் 36 சென்டிமீட்டர் மழை என்பது பதிவாகி உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தான் ராமேஸ்வரத்தில் பெய்த மழையை பார்த்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வியந்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ராமேஸ்வரத்தில் 3 மணிநேரத்தில் 362 மில்லி மீட்டர் (36 சென்டிமீட்டர்) மழை பதிவாகி உள்ளது. நான் பிளாக்கிங் எழுத தொடங்கிய காலத்தில் இருந்து இவ்வளவு தீவிரமான மழையை பார்த்தது இல்லை. இதை மேக வெடிப்பு என்று கூறாமல் சூப்பர் மேக வெடிப்பு என்று அழைக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications