மந்தமாக பெஞ்சல் புயல்..மீம்ஸ் போட்டு கலாய்க்காதீங்க! கதறவிட்ட ’கஜா’.. ஞாபகம் இருக்கா? சின்ன ரீவைண்ட்
சென்னை: வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு பெஞ்சல் ( ஃபெங்கல் - cyclone fengal) புயலாக மாறி இருக்கிறது. நீ.. ஃபெங்கலா இல்ல பொங்கலா? என இந்த புயல் மிகவும் மந்தமாக இருப்பதாக நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். இதே போல் மிகத் தாமதமாக உருவான கஜா புயல் கரையோடு காணாமல் போய்விடும் என கணித்த நிலையில் டெல்டா தொடங்கி கேரளா வரை சென்று ஆட்டம் காண வைத்தது யாருக்கும் அவ்வளவாக தெரியாது. கஜா புயல் என்றால் என்ன? அது டெல்டா மாவட்டங்களில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? என்பது குறித்து ஒரு சின்ன ரீவைண்ட்..
தென்மேற்கு வங்க கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி ஆழ்ந்த காட்சிகளுக்கு தாழ்வு மண்டலமாக உருப்பெற்றது. தொடர்ந்து மிக மெதுவாக கரையை நோக்கி நகர்ந்து வந்தது. சென்னை - நாகப்பட்டினம் - திருவோணமலையை நோக்கி அது நகர்ந்து வந்த நிலையில் 10 கிலோமீட்டரில் தொடங்கிய அதன் வேகம் படிப்படியாக சரிந்து இரண்டு கிலோமீட்டரை எட்டியது.

இதனால் புயல் உருவாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. இந்திய வானிலை ஆய்வு மையமும், சென்னை வானிலை ஆய்வு மையமும், தனியார் ஆய்வாளர்களும் புயல் உருவாவது தொடர்பாக ஒரு குறிப்பிட்ட முடிவை எடுக்க முடியாமல் திணறினர். அதே நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் ( ஃபெங்கல் - cyclone fengal) என்ற புயலாக மாறும் என பெயர் வைக்கப்பட்டது. அந்தப் பெயர் அவ்வளவுதான் என நினைத்த நிலையில் போக்கு காட்டிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை புயலாக மாறியது.
தொடர்ந்து மிக மெதுவாக நகர்ந்து வரும் அந்த புயல் இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் தரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அதன் போக்கும் மாறி வருகிறது. இதை அடுத்து நீ பெங்கள் இல்லை பொங்கல் இவ்வளவு மந்தமாக இருக்கிறாய்.. என மீம்ஸ் போட்டு கலய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். பொதுவாக புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் திண்டுக்கல், சேலம், கோவை போன்ற மாவட்டங்கள் சிக்குவது கிடையாது என்பது பல ஆண்டுகளுக்கு முன்பு வரை நம்பப்பட்டு வந்தது.
ஆனால் கஜா என்ற ஒரு புயல் ஒட்டுமொத்தமாக அனைவரின் கணிப்பையும் தவிடு பொடியாக்கி விட்டுச் சென்றது. 2018, நவம்பர் 13 வாக்கில் உருவான நிலையில், 15ஆம் தேதி கஜா புயல் கரையக் கடந்தது. முடிஞ்சா எங்க பக்கம் வந்து பாரு.. நீ இவ்வளவு மெதுவா வருகிறாயே .. என வழக்கம் போல மீம்ஸ் போட்டனர் நெட்டிசன்கள். ஆனால் கஜா புயல் செய்த சம்பவமோ வேறு. டெல்டா மாவட்டங்கள் தொடங்கி புதுக்கோட்டை திண்டுக்கல், கோவை, நீலகிரி, என பல மாவட்டங்களில் அதன் கைவரிசையை காட்டி சென்றது.
ஆயிரக்கணக்கான மரங்கள், ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவு உள்ள பயிர்கள், தென்னை மரங்கள், மின்கம்பங்கள், ட்ரான்ஸ்பார்மர் என தான் செல்லும் அனைத்து பகுதிகளில் கண்டதை எல்லாம் அடித்து உடைத்து துவம்சம் செய்தது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. பலர் உயிரிழக்கவும் காரணமாக அமைந்தது. அதனை சரி செய்ய மட்டுமே கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆனது.
தற்போது கூட கொடைக்கானல் உள்ளிட்ட பல பகுதிகளில் கஜா புயலின் கோரத்தாண்டவத்தை நீங்கள் பார்க்க முடியும்.. டெல்டா மாவட்டங்களில் இருக்கும் விவசாயிகளிடம் கஜா புயல் குறித்து சொல்லுங்களேன் என கேட்டால் கண்ணீர் சிந்துவார்கள். புயல் வருகிறது என தெரிந்த உடனே அதிமுக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எதிர்கொண்டது. மேலும் வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சராக இருந்த உதயகுமார் டெல்டா மாவட்டத்திற்கு நேரடியாக சென்றிருந்தார்.
ஆனாலும் இயற்கை முன்னால் எதுவுமே கைகூடவில்லை. வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட கிராமங்கள், மின்சாரம் இல்லாததால் இருட்டான ஊர், உணவு இல்லை, குடிக்க தண்ணீர் இல்லை என அப்பகுதி மக்கள் ஒரு வாரத்திற்கு மேல் அல்லல் பட்டதை இன்றும் மறக்க மாட்டார்கள். புயல் பற்றி பயமுறுத்துவதற்காக இந்த கட்டுரை கிடையாது. ஆனாலும் கவனமாக இருக்க வேண்டும்.. இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள வேண்டும். அதனை வைத்து கிண்டல் செய்யக்கூடாது/ இயற்கைக்கு முன்னால் மனிதன் ஒன்றுமே கிடையாது.












Click it and Unblock the Notifications