வங்கி விடுமுறை.. செங்கல்பட்டு டூ காஞ்சிபுரம்.. இந்த 4 மாவட்டத்திலும் பேங்க் லீவு.. எஸ்பிஐ புது தகவல்
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக, நாளை வங்கிகள், ஐடி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எஸ்பிஐ வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது.
தமிழகத்தில் புயல் தீவிரமடைந்துள்ளதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் ரெட் அலார்ட் (பலத்த மழை) எச்சரிக்கையும் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அறிவிப்பு: இந்த அறிவிப்பினை தொடர்ந்து 4 மாவட்டங்களை தவிர, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணிப்பேட்டை மாவட்டத்திலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.. கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னையில் பெய்து வரும் கனமழை மற்றும் தேங்கி இருக்கும் மழை நீரின் காரணமாக சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. நாளைய தினம் 4ம் தேதி நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை விடுமுறை: அதேபோல, புயல் காரணமாக தமிழகத்தின் குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும், வங்கிகள் மற்றும் ஐடி நிறுவனங்களுக்கும் நாளை பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது,சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.. எனவே, தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தபோது, அது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஞாயிறு மாலை அறிவிப்பார் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஏற்கனவே கூறியிருந்தார்.
திருவள்ளூர்: அதன்படி, தமிழக அரசு தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலுள்ள அனைத்து வங்கிகள், ஐடி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நாளை டிசம்பர் 4 பொதுவிடுமுறையை உறுதி செய்துள்ளது.
அதுமட்டுமல்ல புயலினை ஒட்டி கனமழையுடன் 70 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், அவசியமின்றி பொதுமக்கள் தங்கள் வீட்டைவிட்டு வெளியே உலவ வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியிருக்கிறது. இதனிடையே, எஸ்பிஐ வங்கி ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது..
எஸ்பிஐ: அதாவது, மிக்ஜாம் புயல் காரணமாக, பாரத ஸ்டேட் வங்கி நடத்தும் அப்ரெண்டிஸ் பணிக்கான தேர்வு ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளது. புயலின் காரணமாக, பாரத ஸ்டேட் வங்கி, சென்னை வட்டம் (தமிழ்நாடு மற்றும் புதுசசேரி மாநிலத்தை உள்ளடக்கியது) அப்ரெண்டிஸ்களின் பணிக்கான , தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் 15 மையங்களில் நாளை 04.12.2023 அன்று நடக்கவிருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது... புதிய தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும்" என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications