தமிழகத்தை சுத்து போட்ட கருமேகங்கள்! இன்று 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை! உங்க ஊர் இருக்கா?
சென்னை: தமிழகத்தில் இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரியில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
மேலும், கனமழை காரணமாக இன்று சில பகுதிகளுக்கு ரெட் அலட்டும், 13 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, புதுச்சேரி ,காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஆரஞ்சு அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் கன மழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இதேபோல நாளை வரை மழை பெய்யும் என்பதால் இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழக அரசின் சார்பில் மழை காரணமாக பல்வேறு மீட்பு நடவடிக்கைகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே அந்தப் பகுதிகளில் அத்தியாவசிய துறைகள் தவிர்த்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக சேலம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சேலம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications