சென்னையில் சதம் அடித்த வெயில்.. மதுரையில் 104 டிகிரி கொளுத்தியது! மக்களே உஷார்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக இன்று சென்னையில் வெயில் 100 டிகிரி ஃபாரான்ஹீட்டை கடந்து சென்றிருக்கிறது.
சென்னை உட்பட 8 மாவட்டங்களில் வெயில் சதமடித்திருக்கிறது. அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் வெயில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் என வெயில் பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மதுரை விமான நிலையம்-104.0°F
வேலூர்-103.5°F
ஈரோடு-103.3°F
சென்னை விமான நிலையம்-102.6°F
சேலம்-102.7°F
தருமபுரி-102.2°F
திருசிராப்பள்ளி விமான நிலையம்-102.0°F
கோயம்புத்தூர்-100.4°F
என வெயில் பதிவாகியிருக்கிறது. வெயில் காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர். முன்னதாக இன்று காலை வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில்,
"கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் (நீலகிரி மாவட்டத்தில்) ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. ஆனால் பதிவு செய்யும் அளவுக்கு மழை இல்லை. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. வெயிலை பொறுத்தவரை அதிகபட்சமாக 104 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக கரூர் பரமத்தியில் வெயில் பதிவாகியிருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் உயர்ந்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.
தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35-41° செல்சியஸ், தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33-37° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அடுத்த 7 தினங்களுக்கான எச்சரிக்கை:
29-03-2025 மற்றும் 30-03-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 31-03-2025: தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். 01-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
02-04-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 03-04-2025 மற்றும் 04-04-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை:
29-03-2025 மற்றும் 30-03-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 1-2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். 31-03-2025 முதல் 02-04-2025 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும்.
29-03-2025 மற்றும் 30-03-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2 - 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். 29-03-2025 மற்றும் 30-03-2025: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
இன்று (29-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (30-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" என தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications