G & J இடையே சிக்கிய சேலம்.. 3 மணி நேரம் வெளியே வராதீர்கள்.. கலெக்டர் அறிக்கை.. 108 டிகிரி வெயில்!
சேலம்: சேலத்தில் 108 டிகிரியை கடந்துள்ளது வெயிலின் தாக்கம். எனவே, மதியம் 12 மணி முதல் 3 மணி வரை தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிக்கை வெளியிட்டுள்ளார். கீபோர்டில் G and J இடையே உள்ளது H. அதாவது heat, அதுதான் எங்களை வதைக்கிறது என்று ட்ரெண்டியோடு சொல்கிறார்கள் சேலம் மக்கள்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது குறிப்பாக தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வரும் நாட்களில் வெப்பம் அலை வீச கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது

சேலம் மாவட்டத்தை பொருத்தவரை கடந்த சில தினங்களாக வெப்பத்தின் தாக்கம் 100 டிகிரியை கடந்து நேற்றைய தினம்
108டிகிரி அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அதிக அளவில் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீரை அருந்துமாறு அத்தியாவசிய தேவை இன்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் இந்த வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அத்தியாவசியமும் தேவையும் இன்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications