ஏசி வாங்க போறீங்களா.. நீங்கள் கண்டிப்பாக தெரிஞ்சுக்க வேண்டிய உண்மை.. பாருங்க
சென்னை: டெல்லியில் நேற்று 50 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்தது. சென்னையில் 38 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்துகிறது. ஆனால் காற்றில் ஈரப்பதம் 50 சதவீதத்திற்கு மேல் உள்ளதால் வெப்ப நிலை 49 டிகிரி என்கிற அளவிற்கு உணர வைக்கிறது. இப்படியான சூழலில் ஏசியை ஆடம்பர பொருளாக கருத வேண்டுமா? 28 சதவீதம் ஜிஎஸ்டி நியாயம் தானா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
வானிலை நிலவரம் என்பது கடந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களில் மிக கடுமையாக இருந்தது. சென்னை, டெல்லி போன்ற பல்வேறு பெரிய நகரங்களில் வெப்ப அலையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் நேற்று 51 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது. இது இதுவரை ஏற்படாத வெப்பநிலை ஆகும். இந்த வெயில் காரணமாக வெளியில் சென்ற மக்கள் மயங்கியே விழும் அளவிற்கு நிலைமை இருந்தது.

சென்னையை பொறுத்தவரை கடந்த மூன்று மாதங்களாகவே வெப்பம் மிக கடுமையாக இருக்கிறது. சென்னையை மற்ற ஊர்களின் வெயிலுடன் ஒப்பிட முடியாது.. காரணம்.. மற்ற ஊர்களில் காற்றில் ஈரப்பதம் சென்னை அளவிற்கு இருக்காது. தமிழ்நாட்டின் மற்ற ஊர்களில் வெப்பம் அதிகமாக இருந்தாலும் அதிகப்படியான மரங்களும், காடுகளும் அந்த ஊரையே காப்பாற்றிவிடும். ஆனால் சென்னையில் அப்படி இல்லை.. காங்க்ரீட் காடு ஒரு பக்கம், மறுபக்கம் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கிறது. இந்த வெயில் எப்படி இருக்கும் என்றால், வழக்கமான வெப்பநிலையை விட 10 டிகிரி அதிகமாக இருப்பது போல் உணர வைக்கும்.
இதுபோன்ற வெப்பத்தை சமாளிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக ஏசி இயந்திரம் இருக்க வேண்டும் என்கிற நிலை உருவாகி உள்ளது. நள்ளிரவிலும் 45 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பத்தால் சென்னை கடந்த ஒரு மாதமாக கொதிக்கிறது. ஏசி இல்லாத வீடுகளில் வாழும் மக்கள் வெப்பத்தை தடுக்க முடியாமல் நோய் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். சரியாக தண்ணீர் குடிக்காமல் போனால், பெரிய பாதிப்பை சந்திக்கும் அளவிற்கு நிலைமை உள்ளது. ஏசி இயந்திரம் இருக்கும் வீடுகளில் வசிப்போர் மட்டுமே சென்னையில் தப்பிக்க முடிகிறது..
எனவே ஏசி என்பதை இன்றும் ஆடம்பர பொருளாக கருத வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காலநிலை மாற்றத்தால் தாங்க முடியாத வெயிலும், மழையும் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் நிலை இனி, ஏசி இயந்திரத்தை ஆடம்பர பொருளாக கருதக்கூடாது என்று மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
ஏசி இயந்திரம் என்பது சாமானிய மக்கள் வாங்கும் அளவிற்கு விலையில் இல்லை.. இதற்கு காரணம் ஏசி இயந்திரம் ஆடம்பர பொருளாக வகைப்படுத்தப்பட்டிருப்பதுதான். ஏசி இயந்திரம் வாங்க 28 சதவீதம் ஜிஎஸ்டி கட்ட வேண்டும். ஒன்றரை டன்னுள்ள 40000 ரூபாய் மதிப்புள்ள ஏசி வாங்க வேண்டும் என்றால், 11200 ரூபாய் ஜிஎஸ்டி கட்ட வேண்டும். அதாவது 40000 ரூபாய் எசி 51200 ஆக இருக்கும். இதேபோல் 25000 ரூபாய் மதிப்புள்ள ஏசிக்கு ஜிஎஸ்டி வரியாக மட்டும் 7000 ரூபாய் கட்ட வேண்டும்.
ஒரு காலத்தில் ஆடம்பர பொருளாக இருந்த செல்போன் இன்றைக்கு அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. இதேபோல் இருசக்கர வாகனங்களும், டிவியும் அத்தியாவசிய பொருட்களாக மாறிவிட்டன. இப்போது ஏசியும் அத்தியாவசிய பொருட்களில் மாறிவருகிறது. எனவே ஜிஎஸ்டி 28 சதவீதம் என்பது நியாயம் தானா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஏசி இல்லாமல் வரும் காலத்தில் கடைகளோ அல்லது வீடுகளோ இல்லாத நிலை ஏற்படும் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் வரிவிதிப்புகள் எளிமையாக்கப்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications